/indian-express-tamil/media/media_files/2025/09/19/amudhavanan-2025-09-19-11-01-45.jpg)
தமிழ் திரையுலகில் நடிகர், நகைச்சுவையாளர், நடன ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டு பணியாற்றிவரும் பிரபலமாகத் திகழ்ந்து வருகிறார் அமுதவாணன். தனது கடின உழைப்பு, நட்புணர்வு, மற்றும் சமூக சேவைகளால் மக்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார். அமுதவாணனின் கலைப் பயணம் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கியது. 'ஜோடி நம்பர் 01', 'கலக்கப்போவது யாரு' போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவர் தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார். அங்கிருந்து அவர் வெள்ளித்திரை வாய்ப்புகளைப் பெற்றார். இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரை தப்பட்டை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் ஆர்.கே.சுரேஷ் நடித்த 'பில்லா பாண்டி' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினார்.
இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 06 நிகழ்ச்சி. அதில் போட்டியாளராகப் பங்கேற்ற அமுதவாணன், இறுதிப் போட்டி வரை முன்னேறி, பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். சமீபத்தில், இயக்குனர் செரிப் இயக்கத்தில் வெளியான 'காந்தி கண்ணாடி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே ஒரு உணர்வுபூர்வமான கதையின் மூலம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்தார்.
அமுதவாணன் ஒரு நேர்காணலில் தனது நெருங்கிய நண்பரும் நகைச்சுவை நடிகருமான கே.பி.ஒய். பாலாவுடன் தனக்கு இருக்கும் ஆழமான நட்பைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அமுதவாணன் வெளிநாடுகளில் நிகழ்ச்சி நடத்தச் செல்லும்போது, பாலா அவருடன் துணைக்குச் செல்வாராம். இதற்கான விமான டிக்கெட்டை அமுதவாணன் தனது சொந்தச் செலவில் பாலாவிற்கு எடுத்துச் செல்வாராம். இன்று பாலா புகழின் உச்சியில் இருந்தாலும், அவர்களின் நட்பு மாறாமல் அப்படியே தொடர்கிறது.
Amudhavanan About #kpybala And His Tea Paithiyam 😁😁#Amudhavanan#Kpy#VijayTV
— 𝐋𝐞𝐭𝐬 𝐎𝐓𝐓 𝐖𝐎𝐑𝐋𝐃 (@LetsOTTWorld) September 18, 2025
Part 3 pic.twitter.com/rDDbL7P1al
இந்த நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தையும் அமுதவாணன் விவரித்தார். ஒரு நாளைக்கு எட்டு டீ குடிக்க வைத்தவர் பாலா. அமுதவாணன் டீ குடிக்கச் செல்லலாம் என நேராகக் கூறாமல், "வாஷ்ரூம் போகலாம்" அல்லது "சும்மா கீழே இறங்கிவிட்டு வருவோம்" என வேறு ஏதாவது காரணம் சொல்லி அமுதவாணனை அழைத்துச் செல்வாராம். இப்படியாக, காலையில் நான்கு டீயும், மதிய உணவுக்குப் பிறகு நான்கு டீயும் என ஒரு நாளைக்கு எப்படியாவது எட்டு டீ குடிக்க வைத்துவிடுவாராம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.