முதலில் கர்ப்பம்… இப்போது நிச்சயதார்த்தம்… அடுத்த வருடம் திருமணம்! – தமிழ் நடிகையின் பிளான்!

Amy Jackson Engagement: அடுத்தாண்டு இவர்களது திருமணம் நடக்கிறதாம்.

Amy Jackson Engagement
Amy Jackson Engagement: விக்ரம், விஜய், ரஜினி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஏமி ஜாக்ஸன்.

இறுதியாக இவர் நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படத்தில் நடித்தார். இந்நிலையில் தானும் லண்டனைச் சேர்ந்த ஜார்ஜும் காதலித்து வருவதாக புத்தாண்டின் போது இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார் ஏமி.

இதனைத் தொடர்ந்து, அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் மார்ச் 31-ம் தேதி அறிவித்தார். அப்போது, இது திட்டமிடப்படாத கர்ப்பம், இருப்பினும் பெற்றோர்களாக நானும் ஜார்ஜும் தயாராகியுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று ஏமி ஜாக்ஸன் – ஜார்ஜ் ஆகியோரின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்துள்ளது. இதில் இருவரது உறவினர்களும், நண்பர்களும் கலந்துக் கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, பார்ட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதில் ஏமியும் ஜார்ஜும் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடினார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்தாண்டு இவர்களது திருமணம் நடக்கிறதாம். ஏமிக்கு கிரீஸ் நாட்டில் திருமணம் செய்துக் கொள்ள ஆசையாம். ஆகவே அதற்கான ஏற்பாடுகள் விரைவில் துவங்க இருக்கிறதாம்.

அக்டோபர் மாதம் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் நடிப்பது தான் ஏமியின் திட்டமாம்.

 

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Amy jackson engagement george panayiotou tamil cinema

Next Story
Mani Ratnam’s Ponniyin Selvan: பொன்னியின் செல்வனில் அமலா பால்?ponniyin Selvan: Amala Paul
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com