/tamil-ie/media/media_files/uploads/2019/04/D2-QYw0X4AAbOWP.jpg)
Amy Jackson Pregnant & hosting a Engagement
கர்ப்பமான ஏமி ஜாக்ஸன்: 'மதராசப்பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஏமி ஜக்ஸன்.
பின்னர் விக்ரம், தனுஷ், உதயநிதி போன்ற நடிகர்களுடன் நடித்தார். கடந்த வருடம் வெளியான 2.0-வில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார்.
அதன் பின்னர் வேறெந்த படங்களிலும் கமிட்டாகாத இவர், சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார். அக்டோபரில் பிறக்கப்போகும் தனது செல்லக் குழந்தையை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இவ்வருடத்தின் தொடக்கத்தில், ஏமி ஜாக்ஸனுக்கும் அவருடைய காதலர் ஜார்ஜ் பனயியோடாவுக்கும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/Amy-JACKSON-site.jpg)
இந்நிலையில், கர்ப்பமடைந்திருக்கும் ஏமி, நண்பர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், பிரமாண்ட நிச்சயதார்த்த விழாவை முன்னெடுத்திருக்கிறார்.
மே 5-ம் தேதி லண்டனில் உள்ள ஏமியின் வீட்டில் இந்த நிச்சயதார்த்த விழா நடைப்பெறுகிறது. இதில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.
விருந்தினர்கள் ‘க்ளாஸி சிக்’ உடையில் வரவேண்டும் என ஏமி - ஜார்ஜ் தம்பதியினர் அன்பு கட்டளையிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.