நடிகை அஞ்சலி இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று ஹவுஸ்மேட்டுகளுடன் கலந்துரையாடுகிறார். இதற்கான புரமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வாரத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவடைகிறது. நேற்று, நடிகை சுஜா வெளியேற்றப்பட்டார். அவர் வெளியே வந்ததும் வழக்கம் போல அவருக்கும் குறும்படம் ஒன்றை கமல் போட்டுக் காண்பித்தார், கமல். அதில் அவரின் கலவையான உணர்வுகளை சுவையாக சொன்னார்.
வெளியேற்றப்பட்டதால் துவண்டு இருந்த சுஜாவை கமல் தேற்றும் விதமாக பேசினார். ரசிகர்களின் கைத்தட்டல்தான் வெற்றியின் முதல்படி. நீங்கள் பிக் பாஸில் கலந்து கொள்ள முடியாமல் போயிருந்தால், இந்த வெற்றி உங்களுக்கு கிடைத்திருக்காது என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தினார். ரசிகர்களின் கேள்விகளுக்கும் சுஜா பதில் சொன்னார்.
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போது, மிகுந்த நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார், சுஜா. அவர் கமல்ஹாசனிடம், நீங்கள் என்னுடைய வீட்டுக்கு உணவருந்த வருவதாக சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய திருமணத்திற்கு வந்திருந்து, என் தந்தை செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் என்று உருக்கமாக கேட்டார். கமலும் அவரை கட்டிப்பிடித்து கண்டிப்பாக வருவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னர் அவரை சென்று வா மகளே என்று தட்டிக் கொடுத்து அனுப்பினார்.
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சிநேகன், கணேஷ், ஆரவ், பிந்து மாதவி, ஹரிஷ் ஆகிய 5 பேர் உள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த வாரத்தின் மத்தியில் எலிமினேட் செய்யப்பட உள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருக்கும் 4 பேரில் ஒருவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்த நான்கு பேரும் இறுதி நாள் நடைபெறும் நிகழ்ச்சியில் கமலுடன் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில், நேற்று விஜய் டிவி வெளியிட்ட புரமோவில், வீட்டுக்குள் புதியவர் ஒருவர் வருவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள புரமோவில், அது நடிகை அஞ்சலி என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். பலூன் படத்தில் கதாநாயகியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார். அந்த படத்தின் புரமோஷன் போல காட்சிகள் உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்த போது, ‘நீங்க ஷட்டப் பணுங்க’ என்ற வார்த்தையை பேசினார். அது பிரபலமானது. அதை முதல்வரியாக கொண்ட பாடலுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் ஆடினார். இது ஓவியா பயன்படுத்திய வார்த்தை. அதை வைத்து பாடல் எழுதப்பட்டது என்பதை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வியப்புடன் பகிர்ந்து கொண்டார்கள்.