/indian-express-tamil/media/media_files/Q2KrId9Z1CS2as51bXPV.jpg)
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிய கிஃப்ட் பாக்ஸை அதன் ஊழியர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12-ம் தேதி மும்பையில் மிக ஆடம்பரமாக நடைபெற்றது. அம்பானி வீட்டு திருமணம் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் உலக பணக்காரர்கள், உலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், இந்திய சினிமா நட்சத்திரங்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி உலகமே வியக்கும் அளவுக்கு தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தியிருக்கிறார். ஆனந்த் அம்பானி திருமணத்தையொட்டி, முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசுப் பெட்டி வழங்கி சர்பிரைஸ் கொடுத்துள்ளார்.
Thankyou @reliancejio for the sweets
— The codewali (@the_codewala) July 10, 2024
We wish best for the Anant Ambani’s wedding. pic.twitter.com/GYdk7BiJQN
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தையொட்டி தங்களுக்கு ரிலையன்ஸ் நிறுவனம் கிஃப்ட் பாக்ஸ் அளித்திருப்பதால் ரிலையன்ஸ் ஊழியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிய கிஃப்ட் பாக்ஸை அதன் ஊழியர்கள் பலரும் தங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.