New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/04/delna-11.png)
Sun TV Serial News: பெங்களூருவில் எல்எல்பி படித்து வரும் டெல்னாவிற்கு அன்போ சீரியல் மூலம் ஏகப்பட்ட ஃபேன்ஸ் நிறைய ஃபாலோவர்ஸ்.
சன்டிவியில் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரும் தொடர் 'அன்பே வா' . சீரியல் ஆரம்பித்து சில மாதங்களிலேயே நிறைய ஃபேன்ஸ் பேஜஸ், நிறைய ஃபாலோவர்ஸ். ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு நல்ல டிஆர்பி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வருபவர் டெல்னா டேவிஸ். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர். இவர் பெரியத்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர். தமிழில் குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருந்தார். நடிகையாக இருந்தாலும் டெல்னாவுக்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. தற்போது பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எல்எல்பி படித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வா இருக்கும் அவ்வபோது தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.