/tamil-ie/media/media_files/uploads/2021/02/anbudankushi.jpg)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்புடன் குஷி' தொடரில், அன்பிடம் குஷி தனது காதலை கூறுவது போன்ற வீடியோ ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது.
'அன்புடன் குஷி' சீரியல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொலைக்காட்சித் தொடரில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் 'பிரஜின்' நடித்து வருகிறார். 'குஷி என்ற கதாபாத்திரத்தில் 'ரேஷ்மா வெங்கட்' நடித்து வருகிறார்.
Happy Birthday #Anbu ❤️ #AnbudanKushi#VijayTelevisionpic.twitter.com/7totpY7VWc
— Vijay Television (@vijaytelevision) February 23, 2021
இந்த வீடியோவில், அன்புவிடம் ' ஐ லவ் யு அன்பு', many more happy returns of the day என்று குஷி தன் காதலை வெளிப்படுத்துகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அன்பு, சற்று தயக்கத்துடன் காணப்படுகிறார்.
என்ன #Kushi குஷியா இருக்கீங்க போல! ????
அன்புடன் குஷி - இன்று மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #AnbudanKushi#VijayTelevisionpic.twitter.com/FBlTfc7ylM
— Vijay Television (@vijaytelevision) February 24, 2021
ராஜஸ்தானி குடும்பத்தில் வேலை செய்யும் அன்பு. தனது முதலாளி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவன். முதலாளி மகளான குஷியும், இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். குஷிக்கு ஆடை வடிமைப்பராக அமெரிக்கா சென்று படிக்க ஆசைப்படுகிறார். அன்புவுக்கும்- குஷிக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்ய நிகழ்வுகள் காட்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.