முதல் முறையாக காதலை கூறிய குஷி… அன்பு ரியாக்ஷன் என்ன? க்யூட் வீடியோ

Vijay Tv Serial News: வீடியோவில், அன்புவிடம் ‘ ஐ லவ் யு அன்பு’, many more happy returns of the day  என்று குஷி தன் காதலை வெளிப்படுத்துகிறார்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  ‘அன்புடன் குஷி’  தொடரில், அன்பிடம் குஷி தனது காதலை கூறுவது போன்ற வீடியோ ப்ரோமோவை விஜய் டிவி  வெளியிட்டது.

‘அன்புடன் குஷி’ சீரியல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொலைக்காட்சித்  தொடரில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் ‘பிரஜின்’ நடித்து வருகிறார். ‘குஷி என்ற கதாபாத்திரத்தில் ‘ரேஷ்மா வெங்கட்’ நடித்து வருகிறார்.

 

 

இந்த வீடியோவில், அன்புவிடம் ‘ ஐ லவ் யு அன்பு’, many more happy returns of the day  என்று குஷி தன் காதலை வெளிப்படுத்துகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத அன்பு, சற்று தயக்கத்துடன் காணப்படுகிறார்.

 

 


ராஜஸ்தானி குடும்பத்தில் வேலை செய்யும் அன்பு. தனது முதலாளி மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவன். முதலாளி மகளான குஷியும், இருவரும் சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். குஷிக்கு ஆடை வடிமைப்பராக அமெரிக்கா சென்று படிக்க ஆசைப்படுகிறார். அன்புவுக்கும்-  குஷிக்கும் இடையே நடைபெறும் சுவாரஸ்ய நிகழ்வுகள் காட்சிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Anbudan kushi star vijay serial kushi proposed anbu love scene anbudankushi vijay tv promo

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express