Anchor Actress Jacquelin Viral Video Makeup Photoshoot Tamil News
எப்படிப்பட்ட வடுக்களையும் அவ்வப்போது முக வடிவத்தையும் மறைக்கும், மாற்றும் சக்தி மேக்-அப்பிற்கு உண்டு. அதிலும் குறிப்பாக திரையில் தோன்றுபவர்களுக்கு மேக்-அப்தான் முதன்மை ஆயுதம். சரும பராமரிப்புக்கு ஏராளமான வழிமுறைகள் இருந்தாலும், மேக்-அப் இன்ஸ்டன்ட் பொலிவு கொடுக்கக்கூடியது.
Advertisment
Jacquelin Latest Video Viral
அந்த வரிசையில் சமீபத்தில் தொகுப்பாளினியும் நடிகையுமான ஜாக்குலின், மேக்-அப்பிற்கு முன் மேக்-அப்பிற்கு பின் என முழு ஒப்பனை வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவில் வீட்டிலிருந்து எந்தவித மேக்-அப்பும் இல்லாமல் காரில் செல்கிறார். பிறகு தேன்மொழி ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி மேக்-அப் செய்துகொள்கிறார் என்பதை விடியோவாகப் படம்பிடித்திருக்கிறார். 'எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்' என்கிற கமென்ட்ஸுகள் அதிகமாகக் குவிந்து வைரலாக ஷேர் செய்யப்பட்டு வரும் வீடியோ இங்கே:
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி, பின் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் தன் நடிப்புத் திறனையும் வெளிப்படுத்தினார் ஜாக்குலின். தற்போது 'தேன்மொழி பிஏ' என்கிற சீரியல் மூலம் சின்னதிரையில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்து வருகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil