தமிழ் திரையுலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரு இணை உச்சநட்சத்திரங்களின் ராஜ்யத்தை சந்தித்து வந்திருக்கிறது. தியாகராஜ பாகவதர்-பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர்-சிவாஜி, அடுத்ததாக ரஜினி கமல் இருவருக்கும் இன்றும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
திரையுலகில் தனித் தனி பாதைகளில், தனி தனி பாணிகளில் அவர்கள் பயணித்தனர். சினிமா என்கிற கால்பந்தில் மைதானத்தில் அவர்கள் இருவரும் எதிர் எதிர் கோல்போஸ்ட்டுகளாக பிரித்து வைக்கப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் நட்பு என்கிற பாதையில் அவர்கள் இருவரும் இணைந்தே பயனித்தனர்.
இருவருக்கும் இடையேயான தொழில்போட்டி உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் கமல்ஹாசனின் புன்னகை மன்னன் பட வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
ரஜினி, கமல் ரசிகர்கள் மோதிக்கொண்டிருந்த காலத்தில் அந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களுக்கிடையே உள்ள அன்பையும், சகோதரத்துவத்தையும் இரு ரசிகர்களுக்கும் எடுத்துக்காட்டும் வகையில் ரஜினியை புன்னகை மன்னன் 100வது நாள் விழாவிற்கு அழைத்தார் படத்தின் இயக்குநர் கே.பாலச்சந்தர்.
அந்த நோக்கத்தை பாலச்சந்தர் கூறியதும் உடனடியாக விழாவில் பங்கேற்க சம்மதித்தார் ரஜினிகாந்த். அதோடு மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் பேசும்போது, தனது சக போட்டியாளர் என்பதை துளியும் கருத்தில்கொள்ளாமல் கமல்ஹாசனை மனம் திறந்து பாராட்டினார் ரஜினிகாந்த்.
கமல்ஹாசன் புன்னகை மன்னனில் வசூல் மன்னனாக திகழ்கிறார் என்று பாராட்டிய ரஜினி, நடிகனுக்கெல்லாம் நடிகன் கமல்ஹாசன் என புகழாரம் சூட்டினார். இப்படி தொடர்ந்து தங்களுக்கிடையேயான நட்பு குறித்து ரஜினியும், கமலும் பொதுவெளிகளில் பகிர்ந்துகொண்டு இருவரது ரசிகர்களிடையே இருந்த பகைமை உணர்வை போக்கிவந்தனர்.
நினைத்தாலே இனிக்கும் சூட்டிங்கிற்காக சென்றபோது இரவெல்லாம் ஊர் சுற்றிவிட்டு பகலில் தூங்க இடம் கிடைக்காதபோது, மரத்தடியில் ஒருவர் முதுகில் ஒருவர் சாய்ந்து தூங்கியது போன்ற தங்களின் மலரும் நினைவுகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் பொது மேடைகளில் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழாவில் பேசிய ரஜினி, கமல் குறித்து மனம் திறந்து பாராட்டிய விதம் இருவரது நட்பு போட்டி, பொறாமைகளை கடந்தது என்பதை உலகிற்கு உணர்த்தியது.
ரஜினியின் பேச்சைக் கேட்டு நெகிழ்ந்த கமல்ஹாசன், ரஜினியை கட்டிப்பிடித்து முத்துக்கொடுத்து தங்களது நட்பின் ஆழத்தை சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஒரு மேடையில் "ஒரு முறை கமல் சாரிடம் 'கழுவிட்டு வந்த சும்மா கமலஹாசன் மாதிரி இருப்பேன்' என்ற வசனத்தை ரஜினி சார் கூறியிருப்பார். அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன்.
அதற்கு கமல் சார், 'என்னிடம் இருப்பது வெளி அழகு தான் ஆனால் ரஜினியின் மனதும் தூமையானது என்று கூறினார்" என்று டிடி கூறினார்.
இந்த நிகழ்ச்சி அவரகள் இருவரின் நடிப்பை குறிக்கிறது என்று டிடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.