அவங்களா... லொட லொடன்னு பேசிக்கிட்டே இருப்பாங்களே..! பிக் பாஸ் தமிழ் 5 ஆச்சரிய என்ட்ரி?
Anchor Priyanka Deshpande to enter Bigg Boss 5 Tamil News நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவும் பிக் பாஸில் பங்குபெறப் போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
Anchor Priyanka Deshpande to enter Bigg Boss 5 Tamil News நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவும் பிக் பாஸில் பங்குபெறப் போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
Anchor Priyanka Deshpande to enter Bigg Boss 5 Tamil News
Anchor Priyanka Deshpande to enter Bigg Boss 5 Tamil News : ஜூன் மாதத்திலிருந்து அதிக எதிர்பார்ப்பைக் கொடுத்து, மக்கள் அனைவரையும் பெரும் விவாதத்திற்குள் தள்ளிய நிகழ்ச்சி என்றால் அது நிச்சயம் தமிழ் பிக் பாஸ் சீசன் 5-தான். இம்முறை யார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் முதல் யாரெல்லாம் போட்டியாளராகக் களமிறக்கப்படுவார்கள் என்பது வரை சமூக வலைத்தளங்களில் சீரியஸ் டிஸ்கஷன் ஏராளமாக இருந்தன.
Advertisment
அந்த வரிசையில், சமீபத்தில் ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன்தான் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்ற வாரம் முழுவதும் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து இந்நிகழ்ச்சியில் பங்குபெறப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக நேற்று, நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்காவும் பிக் பாஸில் பங்குபெறப் போகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
Advertisment
Advertisements
விஜய் டிவியின் மாபெரும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் (Bigg Boss Tamil) வெற்றிகரமாக நான்கு சீசன்களை கடந்துவிட்டது. ஜூன் மாத இறுதியில் ஐந்தாம் சீசன் தொடங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்நிகழ்ச்சி தொடங்குவது தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியான அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வரிசையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உள்படப் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா (Priyanka Deshpande) பிக்பாஸ் வீட்டிற்குச் செல்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, மக்கள் பலரும் தங்களின் கலவையான கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
'நிஷா அளவிற்கு சொதப்ப மாட்டார். ஆனாலும் சாண்டி அளவிற்கு வரவும் மாட்டாங்க' என்று ஒரு கமென்ட் வர, இதற்கு முன்பு இருந்த போட்டியாளர்களைக் கலாய்த்து தள்ளினார், இம்முறை இவர் எப்படி பெர்ஃபார்ம் செய்கிறார் என்பதைப் பார்ப்போம் என்று பதிலுக்கு ஏராளமான கமென்ட்டுகள் குவிந்துகொண்டு இருக்கிறது. மேலும், பிக் பாஸ் போனால் உங்கள் நல்ல இமேஜ் டேமேஜ் ஆகிவிடும். தெய்வ செய்து போகாதீர்கள் என்றும் சிலர் நல்ல எண்ணத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.
மேலும், அவங்க போனால் பேசிக்கிட்டே இருப்பாங்களே என்றும் அர்ச்சனாவுக்கு நடந்தது போல் இவருக்கு நடக்காமல் இருக்கனும் என்றும் மக்கள் பகிர்ந்துகொண்டு வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா சென்றால், என்னவெல்லாம் கலாட்டா நடக்கும்? நீங்கள் சப்போர்ட் செய்வீர்களா?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil