இசைஞானி இளையராஜாவுக்கு மேலும் ஒரு கவுரவம்

Ilayaraja : ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ள இசை ஞானி இளையராஜாவுக்கு, ஆந்திர பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இது இளையராஜா பெறும் ஐந்தாவது கவுரவ டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ilayaraja, music director, Honorary doctorate, andhra university, இளையராஜா, இசையமைப்பாளர், கவுரவ டாக்டர் பட்டம், ஆந்திர பல்கலைக்கழகம்
ilayaraja, music director, Honorary doctorate, andhra university, இளையராஜா, இசையமைப்பாளர், கவுரவ டாக்டர் பட்டம், ஆந்திர பல்கலைக்கழகம்

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ள இசை ஞானி இளையராஜாவுக்கு, ஆந்திர பல்கலைக்கழகம், கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இது இளையராஜா பெறும் ஐந்தாவது கவுரவ டாக்டர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள விஞ்ஞான் பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா, நேற்று ( ஜூலை 27ம் தேதி) நடைபெற்றது. இளையராஜாவிற்கு, ஐதராபாத் மதத்திய பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் ஹரிநாராயணா, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். முன்னதாக, இளையராஜா, விழாவுக்கு திறந்த ஜீப்பில் அழைத்து வரப்பட்டார். அவருக்கு சாலையின் இருபுறம் நின்றிருந்த மக்கள் கையசைத்து வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கோபால கிருஷ்ண கோகலே உள்ளிட்டோருக்கும் கவுரவ டாக்டர் விருது வழங்கப்பட்டது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Andhra university confers honorary doctorate for ilayaraja

Next Story
பிராது குடுக்குறேன்னு இப்படியா செய்றது? நம்மளும் குடுப்போம்ல பிராது!Bigg Boss tamil promo
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com