பாத்ரூமில் இருந்து பயந்து வெளியேறிய ஆன்ட்ரியா : அப்படி என்னதான் நடந்தது?

நடிகை அன்ட்ரியா நடிப்பில் உருவான அவள் படப்பிடிப்பின் போது, பாத்ரூம் சென்றவர், அலறியடித்து ஓடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருமுறை பாத்ரூம் சென்றேன். உள்ளே சென்ற நான் பயந்து கத்திக்கொண்டே வெளியே வந்தேன். காரணம், உள்ளே பேய் இருந்ததுதான் என்று சொல்கிறார், நடிகை ஆன்ட்ரியா.

கரப்பான் பூச்சியைக் கண்டாலே பயந்துபோய் காது கிழியும் அளவுக்கு கத்துகிற பெண்கள், பேயைக் கண்டால் பயப்படாமல் இருப்பார்களா? ஆனால், பேய் வேஷம் போட்டவரைப் பார்த்து பயந்துபோய் கத்திய வேடிக்கையான சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது.

சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அவள்’. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் மணிரத்னத்திடம் அசோஸியேட்டாகப் பணியாற்றியவர். இவரும், சித்தார்த்தும் மணிரத்னத்திடம் ஒரே நாளில் உதவியாளர்களாகச் சேர்ந்தவர்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை சித்தார்த் – மிலிந்த் ராவ் இருவரும் இணைந்தே எழுதியிருக்கின்றனர்.

இந்தப் படம், வடஇந்தியாவில் பனி படர்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. “தமிழ் பேய்ப் படங்களைப் போல காமெடியாக இல்லாமல், ஹாலிவுட் படங்களைப் போல ராவான பேய்ப் படமாக இது இருக்கும்” என்கிறார் சித்தார்த்.

இந்தப் படத்தில் சித்தார்த் – ஆன்ட்ரியா இடையே லில் டு லிப் காட்சி இருக்கிறது. இதுகுறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டால், “அதிலென்ன தவறு இருக்கிறது? படத்தில் அதற்கான தேவை இருந்தது. அதனால் நடித்தேன்” என்கிறார்.

‘நீங்கள் பேயைப் பார்த்து பயந்திருக்கிறீர்களா?’ என்று ஆன்ட்ரியாவிடம் கேட்டோம். “எனக்கு கடவுளின் ஆசி இருக்கிறது என நினைக்கிறேன். கடவுள் புண்ணியத்தால் எனக்கு அந்த மாதிரி இதுவரை எதுவும் ஏற்படவில்லை. பொதுவாக, நான் பேய்ப் படங்கள் பார்க்க மாட்டேன். பேய் என்றால் எனக்கு அவ்வளவு பயம். அதனால், நான் நடித்த இந்தப் படத்தை நானே பார்க்க மாட்டேன்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒருமுறை பாத்ரூம் சென்றேன். உள்ளே சென்ற நான் பயந்து கத்திக்கொண்டே வெளியே வந்தேன். காரணம், உள்ளே பேய் இருந்ததுதான். அதற்குப் பிறகுதான் அது பேயாக நடிக்க மேக்கப் போட்டிருந்த ஆர்ட்டிஸ்ட் எனத் தெரியவந்தது” என்று சிரிக்கிறார் ஆன்ட்ரியா. இந்த சிரிப்பு போதுமே ஆன்ட்ரியா… எந்தப் பேயாலும் உங்களை எதுவும் பண்ண முடியாது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close