/tamil-ie/media/media_files/uploads/2017/11/anirudh.jpg)
anirudh ravichander, master, physically challenged person, vaathi coming song
Anirudh: மாற்றுத் திறனாளி ஒருவரின் திறமையைக் கண்டு மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
அண்ணனைப் பார்க்க வந்து கிடைத்த வாய்ப்பு’: காயத்ரி சாஸ்த்ரி
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் அனிருத், பெரிய பட்ஜெட் படங்களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பணி புரிந்து விட்டார். ரஜினி, விஜய், விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இசையமைத்த அனிருத் தற்போது, விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கு இசையமைத்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றன.
Mindblown ! Just pure amazing talent ???????????????? God bless you brother! #VaathiComingpic.twitter.com/QK5gulR5eG
— Anirudh Ravichander (@anirudhofficial) May 8, 2020
இந்நிலையில் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவரின் அபாரத் திறமையை கண்டு அசந்து போயிருக்கிறார் அனிருத். இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் மியூஸிக் பேடு மற்றும் கீ போடு ஆகியவற்றை அட்டகாசமாக கையாண்டிருக்கிறார். அந்த நபர், மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள ’வாத்தி கம்மிங்’ பாடலை அருமையாக இசையமைத்திருக்கிறார். அவர் வாசிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் அனிருத், அட்டகாசம்! அற்புதமான திறமை கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரரே! என்று பதிவிட்டுள்ளார்.
கேண்டிட் அஞ்சலி: டிரடிஷனல் நிக்கி கல்ராணி – படத் தொகுப்பு
இதனை நெட்டிசன்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோவை நடிகர் விஷ்ணு விஷாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். ”இதை மக்கள் பார்க்க வேண்டும், தூய திறமைக்கு அப்பால், எதுவும் உங்களைத் தடுக்க முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.