Anirudh | Andrea Jeremiah | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ- ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த படம் 3. இந்தப் படத்தில் இசை அமைப்பாளராக அனிருத் அறிமுகமானார்.
அதன்பின்னர் விஜய்யின் கத்தி, சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை, ரஜினிகாந்தின் ஜெயிலர், கமல்ஹாசனின் விக்ரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
தற்போது, ரஜினிகாந்தின் 171வது படத்துக்கும், கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்கும் இசை அமைத்து வருகிறார். ஆரம்ப கால கட்டங்களில் இவர் பல்வேறு கிசுகிசுக்களில் சிக்கினார்.
அதில் ஒன்றுதான் நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா உடன் காதல். அக்காலக்கட்டங்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் படங்கள் வைரலாகின.
அனிருத் நடிகை ஆண்ட்ரியாவுக்கு லிப்- கிஸ் அடித்த புகைப்படங்ளும் வெளியாகி சர்ச்சையை அதிகரித்தன. இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் தனது காதல் முறிவுக்கு காரணம் வயதுதான் எனக் கூறியுள்ளார்.
இது குறித்து அனிருத், “என்னுடைய முதல் காதல் 19 வயதில் தொடங்கியது. அப்போது எனக்கு 19, ஆண்ட்ரியாவுக்கு 25 வயது. எங்கள் காதல் தோல்விக்கு முக்கிய காரணம், ஆண்ட்ரியாவுக்கும் எனக்கும் இடையேயான வயது வித்தியாசம்தான். இதனால் எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை. நாங்கள் பிரிந்து விட்டோம்” எனக் கூறியுள்ளார்.
ஆண்ட்ரியா உடனான காதல் நெருக்கம் குறித்து அனிருத் இதுவரை இவ்வளவு ஓப்பனாக பேசியவில்லை. இதற்கிடையில் அனிருத்- ஆண்ட்ரியா குறித்து பல்வேறு மீம்ஸ்களும் உலா வருகின்றன. இதற்கு பாசிடிவ் ஆகவும், நெகடிவ் ஆகவும் கமெண்டுகள் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“