/tamil-ie/media/media_files/uploads/2019/08/Vishal-Anisha-Alla-Reddy.jpg)
Vishal - Anisha Alla Reddy
Vishal - Anisha reddy: நடிகர் விஷால் நேற்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. விஷாலின் வருங்கால மனைவி அனிஷா அல்லா ரெட்டியும் அவருக்கு ஒரு சிறப்பு வெளியிட்டுள்ளார் "இனிய பிறந்தநாள் ஸ்டார், நீங்கள் பிரகாசிக்க பிறந்தவர். உங்கள் அழகையும் உங்கள் இருப்பையும் என்றென்றும் நான் போற்றுவேன். மகத்துவம் உங்கள் வழியில் வருகிறது, நம்பிக்கையுடன் இருங்கள். லவ் ஆல்வேஸ்" என்று தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/vishal-anisha-29819m-1-576x1024.jpg)
விஷால் மற்றும் அனிஷாவின் திருமணம் நிறுத்தப்பட்டதாக, கடந்த சில நாட்களாக வதந்திகள் பரவின. காரணம் அனிஷா தனது சமூக ஊடக வலைதளங்களில் இருந்து விஷாலுடனான புகைப்படங்களை நீக்கியிருந்தார். இப்போது விஷாலுக்கு அனிஷா தெரிவித்துள்ள பிறந்த நாள் வாழ்த்தின் மூலம் இவர்கள் இணக்கமாக இருப்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.
இதற்கிடையே விஷால் தற்போது சுந்தர் சி-யின் ஆக்ஷன் எண்டெர்டெயின்மெண்ட் படமான ‘ஆக்ஷனில்’ நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக தமன்னா நடிக்கிறார். அதோடு, ’துப்பறிவாளன் 2, இரும்புத்திரை 2’ ஆகியப் படங்களும் விஷாலின் கைவசம் உள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.