scorecardresearch

சீரியலில் காலடி வைத்த பிக்பாஸ் அனிதா சம்பத்; மாஸ்ஸான புரோமோ பாருங்க

காவேரி காலெடுத்து வச்சா, பிரச்னை பண்றவன் தூள் தூளா சிதறிடுவான் என்று கூற கலர்ஸ் டிவியில் சில்லுனு ஒரு காதல் சீரியலில் அனிதா மாஸாக அறிமுகமாகிறார்.

anitha sampath, anitha sambath acting in tv serial, colors tamil tv, அனிதா சம்பத், டிவி சீரியலில் அறிமுகமான அனிதா சம்பத், கலர்ஸ் தமிழ் டிவி, சில்லுனு ஒரு காதல், பிக் பாஸ் அனிதா சம்பத், சில்லுனு ஒரு காதல் சீரியல், sillunu oru kadhal serial colors tamil tv serial, anitha sambath acting promo video, sillunu oru kadhal serial, bigg boss anitha sampath

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அனிதா சம்பத் முதல்முறையாக சீரியலில் நடித்துள்ளார். சீரியலில் அனிதா சம்பத் அறிமுகமாகும் மாஸ்ஸான புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடங்கிய அனிதா சம்பத் ஒரு செய்தி வாசிப்பாளராக நிறைய ரசிகர்களைப் பெற்றிருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்பட்ட அவருடைய கேரக்டருக்காக ரசிகர்கள் மத்தியில் பாராட்டுதல்களையும் விமர்சனங்களையும் அவர் ஒரு சேர பெற்றார்.

அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் மீண்டும் செய்தி வாசிப்பாளராகத் தனது பணியைத் தொடர்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு வருகிறார். மேலும், விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வருகிறார்.

இந்த சூழலில்தான், அனிதா சம்பத் முதல்முறையாக டிவி சீரியல் ஒன்றில் நடித்துள்ளார். அந்த சீரியலில் அனிதா மாஸ்ஸாக அறிமுகமாக புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. அது என்ன டிவி சீரியல் என்று தெரிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா?

அனிதா சம்பத் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபர்ப்பாகி வரும் சில்லுனு ஒரு காதல் சீரியலில் அறிமுகமாகிறார். இந்த சீரியலில் அனிதா சம்பத் அறிமுகமாகும் மாஸ்ஸான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அந்த புரோமோவில் , கயல் அழுதுகொண்டிருக்கிறாள். அப்போது கயலோட பிரச்னையை எப்படி தீர்க்கப் போறீங்க மாமா என்று கேட்கிறார்கள். அதற்கு நல்ல போதையில், “மாப்பிள்ளை அதான் நம்ம காவேரி இருக்கிறா இல்லை:” என்று கூறுகிறார். அப்போது ஒரு மாஸான பிஜிஎம் ஒலிக்க அனிதா சம்பத் காரில் இருந்து ஸ்டைலாக வெளியே வருகிறார். காவேரி காலெடுத்து வச்சா, பிரச்னை பண்றவன் தூள் தூளா சிதறிடுவான் என்று கூறுகிறார். கலர்ஸ் தமிழ் டிவியில் சில்லுனு ஒரு காதல் சீரியல் இன்று (ஜுலை 19) இரவு 9.30 மணிக்கு அனிதா அறிமுகமாகிற எபிசோடு ஒளிபரப்பாகிறது.

இப்படி அனிதா சம்பத் தான் நடிக்கும் முதல் சீரியலிலேயே மாஸ்ஸாக அறிமுகமாகியுள்ளார். அனிதா சம்பத் அறிமுகமாகும் சில்லுனு ஒரு காதல் சீரியலின் புரோமோ வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வைரலாகி உள்ளது. அனிதா சம்பத் தான் அறிமுகமாகும் சீரியலின் புரோமோ வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அனிதா சம்பத் குறிப்பிடுகையில், “இது நான் நடிக்கிற முதல் சீரியல், எதுவா இருந்தாலும் பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க…” என்று தெரிவித்துள்ளார்.

முதல்முறையாக டிவி சீரியலில் நடிக்கும் அனிதா சம்பத்துக்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Anitha sampath acting in colors tamil tv sillunu oru kadhal serial promo video

Best of Express