sun news channel: கோவிட் 19 தொற்று காரணமாக லாக்டவுன் ஆரம்பித்த நாட்களில் சன் டிவியில் மதிய செய்திகள் ஒளிபரப்பானது. சன் நியூஸ் சானல் ஆரம்பிப்பதற்கு முன் சன் டிவியில் காலை, மதியம், இரவு என்று மூன்று நேரமும் சன் செய்திகள் என்று சன் டிவி செய்திகள் ஒளிபரப்பி வந்தது. சன் நியூஸ் என்று செய்திகளுக்குத் தனியாக சானல் ஆரம்பித்த நிலையில், சன் டிவியின் மதிய நேர செய்திகள் ஒளிபரப்பு நின்று போனது. இந்த நேரத்தில் உலகெங்கும் கொரோனா தொற்று ஆதிக்கம் தொடங்கியதால், சன் டிவி மதிய நேரத்தில் செய்திகள் ஒளிபரப்பி வருகிறது. முக்கியமாக சன் நியூஸ் சானலில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், வாரத்தில் ஓரிரு நாட்கள் என்று சன் செய்திகள் வாசித்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் முக்கிய செய்தி வாசிப்பாளராக இருந்த ரத்னா போன்றவர்களோடு அனிதா சம்பத் முக்கிய செய்தி வாசிப்பாளராகவும் இடம் வகித்தார். கொரோனா ஊரடங்கு நாட்களில் அனிதா சம்பத் தினமும் சன் செய்திகள்
வாசித்து வந்தார்.
இப்படியான காலக்கட்டத்தில் இப்போதும் ஓரளவு ஊரடங்கு இருக்கும் இந்த நேரத்தில், சன் நியூஸ் செய்தி வாசிப்பாளராக இருந்த கண்மணி சேகர், இப்போது சன் செய்திகள் வாசிப்பதில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அழகிய முகம், சிரிக்கும் கண்கள் என்று இவரது தோற்றம் வசீகரமாக இருப்பதால், இவருக்கு மிகக் குறுகிய காலத்தில் ரசிகர்கள் பெருகி உள்ளனர். சன் செய்திகள் ஒளிபரப்பாகும் நேரத்தில் அப்படி இப்படி கடந்து போவோரும் கண்மணி செய்தி வாசிக்கிறார் என்றால் செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இதை அறிந்த சன் டிவி தினமும் ஒரு வேளை செய்திகளில் கண்மணி இடம்பெறும் வகையில் செய்திகளை ஒளிபரப்பி வருகிறது. செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி செய்தி வாசிக்கையில், அவரது புடவைக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர். ஆண்களும் விரும்பிப் பார்த்து ஷோபனா ரவியின் செய்தி வாசிப்பு தோரணையை ரசிக்கும் வகையில் அவரது வாசிப்பு இருந்தது. அடுத்து அதே தூர்தர்ஷனில் செய்தி வசித்து வந்த ஃபாத்திமா பாபுவுக்கு ரசிகர்கள் இருந்தனர். இவர் தினமும் மல்லிகைப்பூ சரத்தை தொங்கவிட்டு, லூஸ் ஹேர் விட்டு அழகான தோற்றத்தில் செய்தி வாசித்து வந்தார்.
இதை அடுத்து தனியார் சானல்களில் பல செய்தியாளர்கள் நல்ல வாசிப்பாளர்கள் என்று அவர்களுக்கு ரசிகர்கள் இருந்தனர். அப்படியான வரிசையில் பாலிமர் தொலைக்காட்சியில் அனிதா சம்பத், புதிய தலைமுறை சானலில் பிரியா பவனி சங்கர் என்று இருந்தாலும் சன் டிவியில் பேர் சொல்லும்படி இளம் செய்தி வாசிப்பாளர்கள் இல்லை. இந்த நேரத்தில் பாலிமர் தொலைக்காட்சியில் இருந்து அனிதா சம்பத், நியூஸ் 7 சானலில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்தவர், சன் நியூஸ் சானலுக்கு வந்தார். இவருக்கு ரசிகர்கள் பெருக ஆரம்பித்த நிலையில், சன் நியூஸ் சானலின் செய்தி வாசிப்பாளரானார் அனிதா சம்பத். அடுத்து, இவர் சன் டிவியின் வணக்கம் தமிழா, சன் செய்திகள் என்று அடிக்கடி தோன்ற ஆரம்பிக்க இவர்க்கு மவுசு கூடிப்போனது. இதே போன்று இப்போது கண்மணி சேகர் சன் செய்தி வாசிப்பில் தனி இடத்தை பிடித்து, ரசிகர்களும் கூடிப்போக, சன் டிவியின் அனிதா சம்பத்துக்கு அதே சன் டிவியின் கண்மணி சேகர் போட்டியாளராக இருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"