Anitha Sampath Tamil News: சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். இந்த பிரபலம் மூலம் இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். குறிப்பாக விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார், சூர்யா நடிப்பில் வெளிவந்த காப்பான் மற்றும் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் ஆகிய படங்களிலும் நடித்தார்.

செய்தி வாசிப்பாளராக வலம் வந்த அனிதா சம்பத்துக்கு சமூகவலைதளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்த அளவிற்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் தனக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார். மேலும், அவரை க்கிரஸ் ரேஞ்சில் கொண்டாடிய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை தூக்கி வீசி விட்டனர் என்றே கூறலாம்.

அனிதா சமபத் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார். இதேபோல், ‘என் புருஷன் பேர சொல்லாதீங்க ஆரி’ என்று உதட்டை கடித்து எச்சரித்தார். அந்த அளவிற்கு தனது கணவர் மீது தான் கொண்ட அன்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது, சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அனிதா தனது காதல் கணவருடன் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தனது கணவருடன் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்களில் ஒருவர், ‘எப்போது நீங்கள் கர்ப்பம் ஆவீர்கள்’ என்று கேள்வி கேட்டிருந்தார்.
சிலர் அனிதா சம்பத் கர்ப்பமாகத் தான் இருக்கிறார் என நினைத்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்த ஒருவர், ‘இந்த வீடியோ போடற டைம்ல லைட் ஆப் பண்ணிட்டு வேலைய பாதிருக்கலாம். கர்ப்பமாகி இருப்பாங்க’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அனிதா “அய்யோ ஹாய்ஸ் இது ஜெஸ்ட் ரீல்… நான் கர்ப்பமாக இல்லை. உடனே எதற்கு இத்தனை வாழ்த்துக்கள்” என்று அந்த கமெண்ட்க்கு சிரிப்பது போன்ற இமோஜியை பதிவிட்டுள்ளார்.

பொதுவாக இதுபோன்ற கமெண்ட்டுகளை பார்த்தால் வறுத்து எடுத்துவிடும் அனிதா சம்பத் இந்த கமெண்ட்க்கு சிரிப்பது போன்ற இமோஜியை பதிவிட்டு பதிலளித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“