/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-2021-07-13T103253.586.jpg)
Anitha Sampath Tamil News: சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிரபலமானவர் தான் அனிதா சம்பத். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார். இருப்பினும், செய்தி வாசிப்பாளராக இவருக்கு கிடைத்த வரவேற்பு 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப்பின் அதிகம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் தனக்கு இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார். மேலும் வலைதள பக்கங்களில் அவரை கிரஸ் ரேஞ்சில் கொண்டாடிய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரை தூக்கி வீசி விட்டனர்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Screenshot-2021-07-13-at-11.27.18-AM.png)
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Screenshot-2021-07-13-at-11.28.17-AM.png)
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தோன்றாத அனிதா சம்பத் தற்போது சில படங்களில் சிறிய ரோலில் நடித்து வருகிறார். இவர் குறித்த செய்திகள் அவ்வப்போது இணைய பக்கங்களில் உலாவி வந்தாலும் அவை பெரிதும் வைரலாவதில்லை. ஆனால், சமீபத்தில் இவர் பற்றி வெளியாகி செய்தி பெரிதும் பகிரப்பட்டு வைரலானது. அது என்னவென்றால், அனிதா சம்பத் தன்னுடைய கணவர் பிரபாகரனை விவாகரத்து செய்யப்போகிறார் என்பது தான்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Screenshot-2021-07-13-at-11.28.47-AM.png)
இந்த செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனிதா சம்பத் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார். மேலும்,
சமீபகாலமாக பரபரப்பான கண்டெண்ட் எதுவும் கிடைக்காததால் இந்த லெவலுக்கு இறங்கிடிங்களே என அந்த செய்தியை வெளியிட்ட இணைய பக்கத்தை கிண்டல் செய்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/tamil-indian-express-.jpg)
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.