நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிலையில், தற்போது லண்டனில் மீண்டும் ரிசப்ஷன் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தியாவின் அம்மா அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/post_attachments/fea6d854-8fa.jpg)
நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா, கூலி திரைப்படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு எந்தத் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. டாக்டரான அனிதா பின்னர் கோகுல் கிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்த தம்பதிக்கு தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் தியாவும் அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/8edca0a3-a02.jpg)
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அனிதாவின் மகள் தியாவிற்கு தில்லா என்பவருடன் திருமணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. தியாவின் திருமணத்தில் வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர்கள் ரஜினி, பிரபு, பிரசன்னா, சினேகா, இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட நடிகர்களும், நடிகைகளும் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். மேலும், விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பம் திருமணத்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தது. நடிகை வனிதா மட்டும் மிஸ்ஸிங்.
/indian-express-tamil/media/post_attachments/0cfeb0aa-603.jpg)
திருமண பந்தக்கால் நடுதல், சுமங்கலி பூஜை, மெஹந்தி பங்க்ஷன் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வையும் குடும்பத்தினர் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/75700233-d9a.jpg)
இந்தநிலையில், திருமணமாகி 5 மாதங்கள் ஆன போதும், அந்த சந்தோசம் குறையாமல் லண்டனில் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவிற்கு ரிசப்ஷன் நடைபெற்றது. லண்டனில் செட்டிலான அனிதா, தனது மகளின் திருமணத்திற்காகத்தான் சென்னை வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் மீண்டும் குடும்பத்தோடு லண்டன் சென்றுவிட்டார். இந்த நிலையில், லண்டனில் இருக்கும் நண்பர்களுக்காக அனிதா மீண்டும் ஒரு ரிசப்ஷனை நடத்தி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் அனிதா விஜயகுமார் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“