/tamil-ie/media/media_files/uploads/2019/12/a21.jpg)
Anjali Ameer accuses live-in boyfriend of harassment and blackmail - 'காதலன் மிரட்டுகிறார்' - கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பேரன்பு நடிகை!
கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி அமீர் எனும் திருநங்கை நடிகை தமிழில் பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் அஞ்சலி கலந்து கொண்டார்.
இந்நிலையில், சமீபத்தில் அஞ்சலி அமீர் வெளியிட்டிருக்கும் வீடியோ, அக்கட தேசத்தை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
அந்த வீடியோவில், "என்னுடைய காதலர் என்னை சித்ரவதை செய்ததால் அவருடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அவர் தன்னுடன் வாழவில்லை என்றால் ஆசிட் ஊற்றி எரித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4 லட்சம் வரை என்னுடைய பணத்தை பறித்துக் கொண்டார்.
இந்தக் கொடுமைகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஆனால் அந்தக் காதலர் யார் என்பதை அவர் கூறவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.