உச்சக்கட்ட கவர்ச்சி, துணிச்சல் நடிப்பு என பகிஷ்கரனா வெப்சீரிஸில் மாஸ் காடடிய அஞ்சலி.
Anjali in Bahishkarana | தமிழ் திரைபடங்களில் பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் நடிகை அஞ்சலி. இவரின் அங்காடிதெரு முதல் பல படங்கள் இந்த ரகம்தான். இந்நிலையில் இவரின் பகிஷ்கரனா வெப் சீரிஸ் ஜி5 தொலைக்காட்சியில் ஜூலை 19ஆம் தேதி ரிலீசானது. இந்தத் வெப் தொடரில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் படு கவர்ச்சியாக அதேநேரம், துணிச்சலுடன் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை அஞ்சலி.
Advertisment
அதாவது வெப் தொடரில், ஒரு கிராமப்புறத்தை சேர்ந்த பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். இவரின் நடிப்பு பலரிடம் இருந்தும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இது குறித்து அஞ்சலி ஒரு பேட்டியில், “பகிஷ்கரனாவில் புஷ்பா கதாபாத்திரத்தை நான் மிகவும் ரசித்தேன். தைரியமான தருணங்களை நடிப்பதில் எனக்கு முதலில் சங்கடமாக இருந்தது. இதுபோன்ற காட்சிகளில் நடிப்பது கடினம்தான்” என்றார்.
மேலும், பகிஷ்கரானாவில் குறிப்பிட்ட அந்தக் காட்சியை படமாக்கியபோது அங்கு யாரும் இல்லை. அந்தக் காட்சி மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டது. அந்தக் காட்சி எடுத்து முடித்த பின்னர் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். ஒருவேளை இதுபோன்ற காட்சியை முதன்முறையாக நிகழ்த்தியதன் புதுமை காரணமாக இருக்கலாம் அல்லது ஒருவேளை நான் உளவியல் ரீதியாக போதுமான அளவு தயாராக இல்லை” என்றார்.
Advertisment
Advertisements
மேலும் படப்பிடிப்பு பற்றி பேசிய அஞ்சலி, “நான் படப்பிடிப்பில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுடன் அந்தக் காட்சியில் நடித்தேன். மேலும் சம்பந்தப்பட்ட காட்சியை எடுத்தபோது குறைந்த டெக்னிசியன்களே இருந்தனர். இதனால் எனக்கு சற்று தைரியமாக இருந்தது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“