பி.ஜி படிக்க வெளிநாடு போனேன், இங்க நிறைய ஹீரோ வந்துட்டாங்க; வி.ஜே.எஸ், எஸ்.கே பற்றி பேசிய அஞ்சாதே வில்லன் நடிகர்!
அஞ்சாதே அஜ்மலின் கம்பேக் ஸ்டோரி பற்றி அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளதை பற்றி பார்ப்போம். படிக்க சென்ற காலத்தில் நிறைய ஹீரோக்கள் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
அஞ்சாதே அஜ்மலின் கம்பேக் ஸ்டோரி பற்றி அவரே ஒரு நேர்காணலில் கூறியுள்ளதை பற்றி பார்ப்போம். படிக்க சென்ற காலத்தில் நிறைய ஹீரோக்கள் வந்துவிட்டதாக கூறியுள்ளார்.
அஞ்சான் படத்தில் ஹீரோவின் நன்பனாக போலீசுக்கு படிக்கு இளைஞனாக இருந்து பின்னர் வில்லனாக மாறிய நடிகர் அஜ்மல் தான் படிக்க வெள்நாட்டிற்கு சென்ற சிறிது நாட்களிலேயே இங்கு நிறைய புது நடிகர்கள் வந்துவிட்டார்கள் என்று ரெட்நூல் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Advertisment
அஜ்மல் அமீர், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் இயக்குநர் மிஷ்கின் இயக்கிய 'அஞ்சாதே' (2008) திரைப்படத்தில் நடித்த எதிர்மறை கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் மக்களிடம் பரவலாக அறியப்பட்டார். சினிமா உலகில் முதலில் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகனாக அறிமுகமான அஜ்மல், 'அஞ்சாதே' படத்திற்குப் பிறகு தமிழில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து, 'காதலில் விழுந்தேன்' போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார்.
பின்னர், அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தினார். 'கோ', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் 'நேர்கொண்ட பார்வை' போன்ற படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அண்மையில், அவர் மீண்டும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து தனது சினிமா வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். மேலும், அவர் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தலா நான்கு முதல் ஐந்து படங்களில் பணியாற்றியுள்ளார்.
Advertisment
Advertisements
இந்நிலையில் பேட்டி அளித்த அவர், பி.ஜி படிக்க தான் வெளிநாட்டுக்கு சென்ற காலத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் பெரிய அளவில் வளர்ந்தனர் என்று தெரிவித்தார். இதனால், அவர் மீண்டும் திரையுலகிற்கு வரும்போது, தனது சினிமா வாழ்க்கையை புதிதாகத் தொடங்க வேண்டியிருப்பதாகவும் கூறினார்.
படிப்பு முடிந்து வந்ததும் தனக்கு திரையுலகம் ஈஸியாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அதற்குள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் பெரிய அளவில் வளர்ந்தனர் என்றார். அதனால் தான் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளதாக கூறினார். இருப்பினும் தற்போது சில படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறினார். தேவி 2,இரவுக்கு ஆயிரம் கண்கள், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்துள்ளதாக கூறினார். மேலும், அவர் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் தலா நான்கு முதல் ஐந்து படங்களில் பணியாற்றியதாக தெரிவித்தார்.