/tamil-ie/media/media_files/uploads/2021/11/Rajinikanth-2.jpg)
’
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து கலவையான எதிர்வினைகளைப் பெற்றிருக்கலாம், ஆனால் அது நிச்சயமாக பாக்ஸ் ஆபிஸில் அதிசயங்களைச் செய்கிறது.
இந்த தீபாவளிக்கு வியாழன் அன்று வெளியான இப்படம் ஏற்கனவே பாக்ஸ் ஆபிஸில் ரூ 100 கோடியை தாண்டியுள்ளது. வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் கருத்துப்படி, இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் ரூ 70.19 கோடி வசூல் செய்தது. ஆனால் இரண்டாவது நாளில் இருந்து வசூலில் சரிவைச் சந்தித்த அண்ணாத்த திரைப்படம் வெள்ளிக்கிழமையன்று ரூ 42.43 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இருப்பினும், வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு அண்ணாத்த படத்தின் உலகளாவிய மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 112.82 கோடியாக உள்ளது, இந்த வசூல் அண்ணாத்த படத்தை 2021 இன் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாற்றுகிறது.
“சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்தின் #அண்ணாத்த ஜூம்ஸ் வெறும் 2 நாட்களில் WW பாக்ஸ் ஆபிஸில் ₹100 கோடியை கடந்தது. நாள் 1 – ₹ 70.19 கோடி, நாள் 2 – ₹ 42.63 கோடி, மொத்தம் – ₹ 112.82 கோடி” என விஜயபாலன் ட்வீட் செய்துள்ளார்.
Superstar #Rajinikanth's #Annaatthe ZOOMS past ₹100 cr at the WW box office in just 2 days.
— Manobala Vijayabalan (@ManobalaV) November 6, 2021
Day 1 - ₹ 70.19 cr
Day 2 - ₹ 42.63 cr
Total - ₹ 112.82 cr
படத்திற்கு நல்ல வசூல் இருக்கும்போதும், அண்ணாத்த விமர்சகர்களை ஈர்க்கத் தவறிவிட்டது., “இந்தத் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் ஒரு தொந்தரவான நடைமுறையை அம்பலப்படுத்துகிறது. ரஜினிகாந்த் நடிக்கும் வரை இயக்குனர் நாற்காலியில் அமரலாம் என்று சில திரையுலகினர் நம்புவதாக தெரிகிறது. ஒரு சில பஞ்ச்லைன்களை எழுதுங்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு இடையில் சில காட்சிகளை ஒன்றாக இணைத்து, கதையின் ஒத்திசைவான ஓட்டம் போன்ற ஒரு மாயையை உருவாக்குங்கள். ரஜினிகாந்த் தான் அத்தனை பளுவையும் செய்ய வேண்டும். அவர் தனது இயக்குனர்களின் குறைகளை ஒவ்வொரு அவுன்ஸ் ஆற்றலாலும், பலத்தாலும் ஈடு செய்ய வேண்டும்” என indianexpress.com க்கான தனது மதிப்பாய்வில், மனோஜ் குமார் எழுதியுள்ளார். மேலும் ஒரே ஒரு நட்சத்திரத்தைத்தான் (ஸ்டார்)படத்துக்குக் கொடுத்தார்.
இந்தி படம் சூர்யவன்ஷிக்கு ஒரு நாள் முன்னதாக அண்ணாத்த ரிலீஸ் ஆனது. அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி படமும் பாக்ஸ் ஆபிஸில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெள்ளியன்று ரூ 26.29 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ப்ளாக்பஸ்டரைப் பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.