ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாகி முதல் வாரத்தில் ரூ.200 கோடி கிளப்பில் நுழைந்து, இரண்டாவது வாரத்திலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலைக்குப் பிறகு திரைக்கு வந்த மிகப்பெரிய திரைப்படங்களில் அண்ணாத்த படமும் ஒன்று. மோசமான விமர்சனங்கள் இருந்தபோதிலும், ரசிகர்கள் ரஜினிகாந்த் நடித்த படத்தை தியேட்டர்களில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சிவா இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ 217.63 கோடி வசூலித்துள்ளது.
வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் அண்ணாத்த திரைப்படத்தின் சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் ட்விட்டரில், அண்ணாத்தே WW (உலகளாவிய) பாக்ஸ் ஆபிஸ் 2வது சனிக்கிழமை நல்ல உயர்வைக் கண்டுள்ளது.
வாரம் 1 – ரூ. 202.47 கோடி
வாரம் 2
நாள் 1 – ரூ. 4.05 கோடி
நாள் 2 – ரூ. 4.90 கோடி
நாள் 3 – ரூ. 6.21 கோடி
மொத்தம் – ரூ. 217.63 கோடி எனப் பதிவிட்டுள்ளார்.
அண்ணாத்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தாலும், திரைப்படம் திரைப்பட விமர்சகர்களை ஈர்க்கத் தவறிவிட்டது. “இந்தத் திரைப்படம் தமிழ்த் திரையுலகில் ஒரு தொந்தரவான நடைமுறையை வெளிப்படுத்துகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் இருக்கும் வரை இயக்குனர் நாற்காலியில் அமரலாம் என சில திரைப்பட இயக்குனர்கள் நம்புவதாக தெரிகிறது. ஒரு சில பஞ்ச்லைன்களை எழுதுங்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு இடையில் சில காட்சிகளை ஒன்றாக இணைத்து, கதையின் ஒத்திசைவான ஓட்டம் போன்ற ஒரு மாயையை உருவாக்குங்கள். மற்றதையெல்லாம் ரஜினிகாந்த் தான் செய்ய வேண்டும். அவர் தனது ஒவ்வொரு அவுன்ஸ் ஆற்றலாலும், பலத்தாலும் தனது இயக்குனர்களின் குறைகளை ஈடுகட்ட வேண்டும்” என indianexpress.com க்கான தனது மதிப்பாய்வில், ஆர்.மனோஜ் குமார் எழுதினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil