Advertisment

அண்ணாத்த முழுப் படமும் ஆன்லைனில் லீக்... ரிலீஸான முதல்நாளே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்!

Rajinikanth's annaatthe full movie download banned : தீபாவளி தினமான இன்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அண்ணாத்த திரைப்படம் கோலகலமாக வெளியாகியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அண்ணாத்த முழுப் படமும் ஆன்லைனில் லீக்... ரிலீஸான முதல்நாளே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்!

Annaatthe full movie download banned; Rajinikanth's annaatthe releases today: ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள அண்ணாத்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. கடந்த ஆண்டு வெளியான தர்பார் படம் ரசிகர்கள் மத்தயில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அண்ணாத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் விஸ்வாசம் படத்தின் மூலம் பெரிய வெற்றி கண்ட சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியிருந்தது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படம் கடந்த ஆண்டே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணாத்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 4-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர், டிரெய்லர், பாடல்கள் வரிசையாக வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து படம் வெளியாகும் தேதி நெருங்கிய நிலையில், இந்த படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அண்ணாத்த படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு முன்பே அண்ணாத்த படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியது. ரசிகர்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தில் புக்கிங் செய்து வந்த நிலையில், தீபாவளி தினமான இன்று அண்ணாத்த திரைப்படம் கோலகலமாக வெளியானது. ரசிகர்கள் இந்நாளை திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

காளையன் என்ற ஊராட்சி மன்ற தலைவராக வரும் ரஜினிக்கு கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்துள்ளார். நயன்தாரா ரஜினியின் காதலியாகவும், மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, அபிமன்யு சிங், பாலா, வேலா ராமமூர்த்தி, சூரி, சதீஷ், சத்யன், குளப்புலி லீலா, ஜார்ஜ் மரியன், அர்ஜை, தவசி, கபாலி விஸ்வநாத், லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், எடிட்டர் ரூபன் படத்தொகுப்பு பணிகயை செய்துள்ளார். உள்ளிட்ட பிரபல திறமைசாலிகள் உள்ளனர். ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படம் தற்போது சட்டவிரோதமாக இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூவிரூல்ஸ் (Movierulz) தமிழ் ராக்கர்ஸ் (Tamilrockers) மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட இணையதளங்களில் அண்ணாத்த படம் கசிந்துள்ளது. இதனால் இப்படத்தின் வசூல் பாதிக்கப்படலாம். மேலும் திரையரங்குகளில் வெளியான 28 நாட்களுக்கு பிறகு அண்ணாத்த படம் நெட்ஃபிக்ஸ் மற்றும் சன்நெக்ஸ்ட் ஆப்களில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annaatthe Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment