அண்ணாத்த திரைப்படம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தை இரக்கமில்லாமல் விமர்சனம் செய்வது என்றால், இயக்குனர் சிவா பழைய மொந்தையில் இருந்து பழைய கள்ளை எடுத்து வந்து மீண்டும் ஒரு பழைய மொந்தையில் ஊற்றிவிட்டார் என்று புலம்புவதைத் தவிர, உண்மையில் பேசுவதற்கு ஒன்றுமில்லை. பா.ரஞ்சித்தின் கபாலி அல்லது காலாவைப் போல, இந்தப் படத்தில் ஆழமான அர்த்தம் உள்ள வசனம் இல்லை. ஏனெனில், நுணுக்கமான அல்லது யதார்த்த உலக பிரச்சனைகளைப் பற்றி பேசுவது சிவாவின் வலிமையான பகுதி அல்ல. கார்த்திக் சுப்பாராஜின் பேட்ட படத்தைப் போல, அண்ணாத்த படமும் ஒரு புத்திசாலித்தனமான மற்றும் வேடிக்கையான ஆக்ஷன் படமாகவும் இல்லை.
கொல்கத்தாவின் செய்தி சேனல்கள் மற்றும் சமூக ஊடக விவாதங்களில் அண்ணாத்த பற்றி அனல் பறக்க பேசுவதில் அண்ணாத்த படம் தொடங்குகிறது. அண்ணாத்த என்கிற காளைய்யன் (ரஜினிகாந்த்) கொல்கத்தா முழுவதிலும் உள்ள மிகப்பெரிய கேங்க்ஸ்டர்களில் ஒருவரின் தூக்கத்தைக் கெடுக்கிறார். கொல்கத்தாவின் தெருக்களில் துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் சண்டையிடும் கும்பல் சண்டைகள் ஒரு பொதுவான காட்சியாகிவிட்டதால், நம்மால் போலீசாரைக் காண முடியவில்லை. அதனால், ஒட்டுமொத்த கொல்கத்தா காவல்துறையும் அரசாங்கமும் நீண்ட விடுமுறையில் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டின் ஒரு எளிய கிராமத்தைச் சேர்ந்த காளைய்யன் கொல்கத்தா நகரத்தை மோசமான ரவுடி கும்பல்களில் இருந்து விடுவிக்கிறார்.
அண்ணாத்த கதையில் பல லாஜிக் ஓட்டைகள் உள்ளன. அதில் இதுவும் ஒன்று. காதல் எப்படி ஏற்படுகிறது என்பது பற்றி சிவாவின் மேலோட்டமான புரிதல் என்று சொல்ல முடியாது. அவர் ஒரு அறையில் உட்கார்ந்து, அவரது படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்பதை விளக்குவதற்கு சில தார்மீக நகைச்சுவையான நியாயங்களைக் கொண்டு வரலாம். ஆனால், பலர் அதை ஒப்புக்க்கொள்ள மாட்டார்கள்.
சிவாவின் சினிமா உலகத்தில் உணர்ச்சிகளும் உறவுகளும் நம் உலகத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள வழிகளில் செயல்படுகின்றன. முன்மாதிரியாக இருந்த உடன்பிறப்புகள் திடீரென்று ஒருவருக்கொருவர் துரோகம் செய்கிறார்கள். மேலும், தங்கள் வாழ்நாள் முழுவதும் பரம எதிரிகளாக இருந்த உடன்பிறந்தவர்கள், ஒரு கணத்தில் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். உதாரணமாக, பிரகாஷ்ராஜின் கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்வோம், அவர் கிராமத்தில் பணக்காரராகவும் மோசமான மனிதராகவும் நடிக்கிறார். ஆனால், காளைய்யனுடன் கடந்து வந்த பிறகு, அவர் ஒரு உன்னதமான மற்றும் ஞானமுள்ள மனிதராக மாறுகிறார். ஜெகபதி பாபு சுத்தமான கெட்டவர். ஆனால், ஒரு மாலையில், காளைய்யனுக்கு நன்றி கூறி அவர் ஒருபோதும் உணராத உணர்ச்சிகளை அனுபவிக்கத் தொடங்குகிறார்.
சித்தார்த்த கௌதமருக்குகூட ஞானம் பெற்று புத்தராக மாறுவதற்கு 49 நாட்கள் ஆழ்ந்த தியானம் தேவைப்பட்டது. ஆனால், சிவாவின் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளாக தங்களின் உணர்ச்சிகளை சில நிமிடங்களிலேயே வெளிப்படுத்திவிடும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். அதுதான் இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றினாலும், அவர்களைப் பொருந்தாதவர்களாக செய்கிறது.
தமிழ்த் திரையுலகில் ஒரு பிரச்சனையான பழக்கத்தை இந்தப் படம் அம்பலப்படுத்துகிறது. ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் வரை இயக்குனர் சௌகரியமாக இருக்கலாம் என சில திரைப்பட தயாரிப்பாளர்கள் நம்புவதாக தெரிகிறது. ஒரு சில பஞ்ச் வசனங்களை எழுதுங்கள், சண்டைக் காட்சிகள் மற்றும் பாடல்களுக்கு இடையில் சில காட்சிகளை ஒன்றாக இணைத்து, கதையின் ஒத்திசைவான ஓட்டம் போன்ற ஒரு மாயையை உருவாக்குங்கள். ரஜினிகாந்த் தான் அத்தனை வேலையையும் செய்ய வேண்டும். அவர் தன் இயக்குனரின் குறைகளை ரஜினிகாந்த் தன் ஆற்றலாலும், பலத்தாலும் ஈடு செய்ய வேண்டும்.
அண்ணாத்த திரைப்படம் ஒரு பரிமாணமாக இருக்கிறது.. காளைய்யன் மிகவும் புத்திசாலி, அவருக்கு உலகத்தைப் பற்றிய புரிதல் தேவையில்லை. இந்த பூமியில் உள்ள அனைத்தையும் பற்றி அவருக்கு ஒரு கருத்து உள்ளது. மேலும் அவர் ஒருபோதும் தவறு செய்யமாட்டார். காளைய்யனை ஒரு அறிவாளி மனிதனாக மாற்றுவதற்கு ஒரு சம்பவம் வருகிறது. பல சுவாரசியமான மற்றும் குறிப்பிடத்தக்க துணை கதாபாத்திரங்கள் வெளிவருவதற்கு இது ஒரு சாதகமற்ற சூழலை உருவாக்குகிறது. படத்தில் காளைய்யனைத் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் புத்திசாலித்தனமாக இல்லை. கீர்த்தி சுரேஷின் மீனாட்சி அல்லது நயன்தாராவின் வழக்கறிஞர் கேரக்டரும் கூட புத்திசாலித்தனமாக இல்லை.
வழக்கறிஞராக இருக்கும் நயன்தாராவின் கதாபாத்திரம் காளைய்யனுடனான சில நிமிட உரையாடலில் நீதி பற்றிய ஒரு பாடத்தை பெறுகிறது. அவள் தனது கட்சிக்காரருக்கு எதிராக வழக்கில் வாதிட அது போதுமானதாக இருக்கிறது. மீனாட்சி 10 அடி தூரத்தில் இருந்த தன் சொந்த சகோதரனைக் கூட கண்டு கொள்ள முடியாத அளவுக்கு தொலைந்து போகிறாள்.
பார்வையாளர்கள் ரஜினிகாந்தை நேசிக்கிறார்கள். அவர் தீக்குச்சியைக் கொளுத்தும்போது அல்லது கையெறி குண்டுகளை பிடித்து விளையாடும் போது அதைக் கடுமையாகப் பார்த்து ரசித்து உற்சாகப்படுத்தலாம். ஆனால், ரஜினிகாந்த் மீதான பார்வையாளர்களின் அன்பை வெறுமனே சுரண்டுவதைத் தவிர, அவர்களுக்கு ஃபேன்ஸியாக ஏதாவது இந்த திரைப்படம் வழங்க வேண்டும். அண்ணாத்த படம் லாஜிக்படி இருக்கும் என்று எதிர்பார்க்க இல்லை. ஆனால், நகைச்சுவை உள்ளிட்ட உணர்ச்சிகளைக் கையாளும் போது பெரும் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
படத்தில் புதிதாக கொடுக்க எதுவும் இல்லாதபோது, அண்ணாத்த படம் ஏன் தயாரிக்கப்பட வேண்டும் என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது.
சிவாவிடம் கேட்டால், ரஜினிகாந்தை ஒரு படத்தில் இயக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவு என்றும் அதற்கு அவரும் விதிவிலக்கல்ல என்றும் கூறலாம். ஆனால், புதிதாக எதையும் படத்தில் கொண்டுவராத இயக்குனருடன் பணிபுரிந்ததற்காக ரஜினிகாந்த் சொல்லக்கூடிய வருத்தம் என்ன?
அண்ணாத்த இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார். மேலும், அது பாசம் மற்றும் உறவுகள் பற்றிய பிரச்னைகளுக்கு விடை அளிக்கிறது. நாம் பெரிய படங்கள் என்று நினைப்பதில் ஏதோ தவறு இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“