காணாமல்போன 'அன்னாபெல்' பேய் பொம்மை... பீதியில் உறைந்த உள்ளூர் மக்கள்!

கான்ஜூரிங், அன்னாபெல் உள்ளிட்ட ஹாரர் படங்களால் புகழ்பெற்ற அன்னாபெல் பேய் பொம்மை அமானுஷ்ய அருங்காட்சியகத்திலிருந்து மாயமானதாக வெளியாகி உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கான்ஜூரிங், அன்னாபெல் உள்ளிட்ட ஹாரர் படங்களால் புகழ்பெற்ற அன்னாபெல் பேய் பொம்மை அமானுஷ்ய அருங்காட்சியகத்திலிருந்து மாயமானதாக வெளியாகி உள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Annabelle doll missing?

காணாமல்போன 'அன்னாபெல்' பேய் பொம்மை... பீதியில் உறைந்த உள்ளூர் மக்கள்!

அமெரிக்காவில் அமானுஷ்யம், பேய்கள் சார்ந்த விஷயங்களை கையாள்பவர்களாக 1970-களில் பிரபலமாக இருந்தவர்கள் வாரன் தம்பதியினர். இவர்கள் கையாண்ட வித்தியாசமான அமானுஷ்ய சம்பவங்களை மையப்படுத்தி ஹாலிவுட்டில் கான்ஜூரிங், அன்னாபெல், நன் உள்ளிட்ட ஹாரர் திரைப்படங்கள் பல வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டன. 

Advertisment

அதன்மூலமாக, ராகெடி ஆன் என்ற அன்னாபெல் பொம்மையும் பிரபலமாகியது. வாரன் தம்பதி கையாண்ட ராகெடி ஆன் பொம்மைக்குள் அன்னாபெல் என்ற சிறுமியின் ஆவி உள்ளதாக நம்பப்படுகிறது. பேய் மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்துவந்த எட் மற்றும் வாரன் தம்பதி, அந்த பொம்மையை ஒரு நர்சிங் மாணவியிடம் இருந்து பெற்றதாகவும், அந்த பொம்மைக்குள் 'அன்னாபெல்' என்ற சிறுமியின் ஆவி இருப்பதாகவும் கூறினர். இந்த பொம்மை வாரென் அமானுஷ்ய அருங்காட்சியகத்தில் கண்ணாடி பேழைக்குள் பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளது. சமீபமாக இந்த பொம்மையை அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு காட்சிக்காக கொண்டு சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

கந்தல் துணிகளால் செய்யப்பட்ட அந்த பொம்மை, சிவப்பு நிற தலைமுடி, முக்கோண வடிவிலான மூக்கு மற்றும் பட்டன்களால் செய்யப்பட்ட கண்களை கொண்டிருந்தது. பொம்மை குழந்தைகளை மிகவும் கவர்ந்த நிலையில், 'ராகெடி ஆன்' பொம்மையின் விற்பனை சூடுபிடித்தது. 1970-களில் 'அன்னாபெல்' என பெயரிடப்பட்ட 'ராகெடி ஆன்' பொம்மை பிரபலமடைய தொடங்கியது.

இந்நிலையில், கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள 'வாரன்ஸ் அக்கல்ட்' அருங்காட்சியம் சார்பில் 'அன்னாபெல்' பொம்மையை அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச்சென்று காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்படி அண்மையில் லூசியானா மாகாணத்தில் 'அன்னாபெல்' பொம்மை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில்தான் லூசியானாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நோட்டாவே ரிசார்ட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் பலர் 'அன்னாபெல்' பேய் பொம்மையை லூசியானாவிற்கு கொண்டு வந்ததே தீ விபத்திற்கு காரணம் என்று கருத்து பதிவிடத் தொடங்கினர். இருப்பினும் இந்த கருத்திற்கு எந்த ஆதாரமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisment
Advertisements

இந்நிலையில், 'அன்னாபெல்' பொம்மை திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் பரவத் தொடங்கியது. இதனால் லூசியானாவைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில், "என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை", "பேய் பொம்மையை எதற்காக நாடு முழுவதும் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள்?" என்பது போன்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், 'அன்னாபெல்' பொம்மை உண்மையிலேயே மாயமாகிவிட்டதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Some wild and crazy internet rumors this morning claiming that we lost Annabelle. She/it is NOT lost and here’s Dan...

Posted by Ryan D. Buell on Saturday, May 24, 2025

கண்ணாடி பெட்டிக்குள் இருக்கும் 'அன்னாபெல்' பொம்மையை காட்டி, "அன்னாபெல் பத்திரமாக இருக்கிறாள். அவள் எங்கும் செல்லவில்லை. அவள் அக்.4-ந்தேதி இலினாய்ஸ் மாகாணத்திற்கு வர இருக்கிறாள். அவளை நேரில் காண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் 'அன்னாபெல்' பொம்மை காணாமல் போகவில்லை என்பது உறுதியாகியுள்ளது. டிக்கெட் விற்பனையை அதிகரிக்க 'அன்னாபெல்' பொம்மையை பற்றி இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Hollywood

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: