’பார்த்தால் பசி தீரும்’ படத்தில் நடித்த கதாநாயகிகளின் பெயரில், யார் பெயரை முதலில் போட வேண்டும் என்பதில் எழுந்த சிக்கல் தொடர்பாக கவிஞர் கண்ணதாசனின் மகன் சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.
கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன் வீடியோவில் பேசியதாவது ” அப்பா எழுதும் பாடல் வரிகளை படத்தின் இயக்குநருக்கோ, எழுத்தாளருக்கோ, கதாநாயகனுக்கோ பிடிக்கவில்லை என்றால் சலிக்காமால் பாடல் வரிகளை அப்பா மாற்றி எழுதி தருவார். குறிப்பாக கதாநாயகன் யாரும் பாடல் வரிகள் தொடர்பாக கவலைப்பட மாட்டார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் மட்டும்தான் பாடல் வரிகளில் கவனம் செலுத்துவார். இந்நிலையில் ’பார்த்தால் பசிதீரும்’ படத்தில் உள்ள பாடலின் ஒன்றின் பல்லவியை அப்படத்தின் தயாரிப்பாளர் மாற்றச் சொன்னார். இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சிவாஜி ஆகியோர் 2ம் உலகப்போரின் போது தேசப் படையில் சேர்ந்து, விமானப் படையில் பணியாற்று கின்றனர். அப்போது அவர்கள் சென்ற விமானம் ஜப்பான் படையின் தாக்குதால், கீழே விழுந்தது. இதனால் ஜெமினி கணேசனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுவிடும். சிவாஜி, வரை அருகில் இருக்கும் மலைக்கிராமத்திற்கு அழைத்து செல்வார். அங்கிருக்கும் மக்கள் அவருக்கு உதவி செய்வார்கள். ஜெமினி கணேசன் குணமாகி வரும் நேரத்தில் ஜப்பான் படைகள், மலை கிராமத்திற்கு வருவார்கள். அப்போது சிவாஜி, ஜெமினி கணேசனை காப்பாற்ற அவரிடம் மாட்டிக்கொள்வார். இதைத்தொடர்ந்து ஜப்பான் படை அங்கிருந்து சென்றுவிடும். அங்கிருக்கும் சாவித்திரியை ஜெமினி கணேசன் திருமணம் செய்துகொள்வார். சாவித்திரி கர்ப்பிணி ஆவார். அப்போது மீண்டும் விமான படைக்கு ஜெமினி கணேசன் செல்வார். தொடர்ந்து ஜப்பான் படைகளின் தாக்குதலால் சாவித்ரி வாழ்ந்த கிராமம் அழிந்துவிடும். ஜப்பான் படையின் குண்டு தாக்குதலில் சாவித்திரி பார்வை இழந்துவிடுவார், இதைத்தொடர்ந்து ஜெமினி கணேசன், சாவித்திரியை தேடி வருவார். ஆனால் அப்போது முழு மலைக்கிராமம் அழிந்திருக்கும். அவரால் சாவித்திரியை கண்டுபிடிக்க முடியாது.
இதனால் அவர் சென்னை வந்துவிடுவார். இதே நேரத்தில் சிவாஜி விடுதலையாகி, அந்த கிராமத்திற்கு சென்று சாவித்திரியை கண்பிடித்துவிடுவார். ஆனால் ஜெமினி கணேசன் பற்றிய விவரம் இவருக்கு தெரியாது. இதனால் சாவித்திரி மற்றும் அவரது குழந்தையை அழைத்துக்கொண்டு, அவரும் சென்னைக்கு செல்வார். ஜெமினி கணேசன், அவரது முறைப்பெண்ணான சௌகார் ஜானகியை திருமணம் செய்துகொள்வார். சௌகார் ஜானகி ஒரு இதய நோயாளி அவருக்கும் குழந்தை பிறக்கும். சிவாஜி கணேசன்,ஜெமினியை சந்தித்து உண்மையை தெரிந்துகொள்வார். இந்நிலையில் சௌகார் ஜானகியின் தங்கையான சரோஜா தேவியை சிவாஜி காதலிப்பார். ஆனால் சௌகார் ஜானகி சாவித்திரியை சிவாஜி கணேசனின் மனைவி என்று தவறாக எடுத்துகொள்வார். இதனால் அவர் சிவாஜியை கண்டிப்பார். இப்போது ஒரு பாடல் வரும் ” உள்ளம் என்பது ஆமை. அதில் உண்மை என்பது ஊமை. சொலிலில் வருவது பாதி நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி” என்ற பல்லவியை என் அப்பா எழுதினார். இந்த வரிகளில் உள்ள ஊமை மற்றும் ஆமை என்பது அபசகுணம் என்று தயாரிப்பாளர் இந்த வரிகளை மாற்றச் சொன்னார். ஆனால் அப்பா அதற்கு ஏற்றுக்கொள்ளவில்லை. பிடிவாதமாக இருந்தார். இந்த படத்தில் மூன்று முக்கிய நடிகைகள் நடித்துள்ளனர். இதனால் யார் பெயரை முதலில் போட வேண்டும் ? என்ற சிக்கல் எழுந்தது. சாவித்திரி மற்றும் சரோஜா தேவி இருவருமே தங்கள் பெயர் முதலில் வரவேண்டும் என்று கூறினார்கள். இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர, தயாரிப்பாளர், அனைவரின் முகங்களையும் இணைத்து ’உங்கள் அபிமான நடத்திரங்கள் நடிக்கும்’ என்று போட்டதால் அந்த சிக்கல் முடிவுக்கு வந்தது. மேலும் இது போன்று இந்திய சினிமா வரலாற்றில் முதலில் அப்போதுதான் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்” என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.