டேய் அண்ணாதுரை... மகனை அழைத்த கண்ணதாசன்; மனம் வருந்திய‌ அண்ணா: க்ளாசிக்‌ ஃப்ளாஷ்பேக்!

கவிஞர் கண்ணதாசன் தன் மகன்களுக்கு பெயர் வைத்த நிகழ்வு குறித்து அவரது மகன் அண்ணாதுரை மனம் திறந்துள்ளார்.

கவிஞர் கண்ணதாசன் தன் மகன்களுக்கு பெயர் வைத்த நிகழ்வு குறித்து அவரது மகன் அண்ணாதுரை மனம் திறந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
anna

டேய் அண்ணாதுரை... மகனை அழைத்த கண்ணதாசன்; மனம் வருந்திய‌ அண்ணா: க்ளாசிக்‌ ஃப்ளாஷ்பேக்!

தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களில் மிகச் சிறப்பாக பேசப்படும் ஒருவராக இருப்பவர் கண்ணதாசன். அவரைப் போல ஒரு கவிஞனை, தமிழ் திரைப்படம் மீண்டும் பெற முடியும் எனக் கூறுவது மிகவும் கடினம். அவரது தனித்திறமை என்னவெனில், எந்த ஒரு இசையையும் கொடுத்தால், அதற்கேற்ப சற்றும் தயக்கமின்றி மிகச் சிறந்த பாடல் வரிகளை சில நிமிடங்களில் எழுதிவிட முடிந்தார்.

Advertisment

சில நேரங்களில், பத்து நிமிடத்திற்குள் ஒரு முழு பாடலை உருவாக்கி, அதை முடித்து விட்டு பிற வேலையுக்கு சென்றுவிடும் அளவிற்கு ஒரு அதிவேகக் கவிஞராக இருந்தார். இசை அமைப்பாளர்கள் அவரிடம் ஒரு தாளத்தை அல்லது மெலடியை கொடுத்தவுடன், கண்ணதாசன் அந்த இசையின் உணர்வையும்,  அழுத்தத்தையும் மிக நுணுக்கமாக உணர்ந்து, அதற்கு ஏற்றபடி பொருத்தமான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பாடலாக்குவார். 

அவருடைய பாடல்களில் காணப்படும் ஆழமான சிந்தனையும், உருக்கமான உணர்வுகளும், எளிய தமிழில் மிக உயர்ந்த இலக்கியத்தை அளிக்கக் கூடியதாய் இருப்பதாலேயே, அவர் பாடல்களுக்கு இன்னும் பரவலான வரவேற்பு இருக்கிறது. அவருடைய பங்களிப்பு, தமிழ் திரைப்பட இசை உலகில் ஒரு தனி அடையாளமாகவே உள்ளது. அவர் எழுதிய ஒவ்வொரு வரியும் நம் மனதைக் கடந்து, நம்மை எண்ணத்திலும் உணர்விலும் ஆழமாக இழுக்கும் வகையில் இருக்கும். 

அதனால்தான், இன்று வரைக்கும் பாடலாசிரியர் கண்ணதாசனின் பாடல்கள் அழியாதவை என்றும், அவர் தமிழ் சினிமா காண்பித்த தலைசிறந்த கவிஞர் என்றும் நாமே பெருமையுடன் கூறுகிறோம். இந்நிலையில், கவிஞர் கண்ணதாசன் தன் குழந்தைகளுக்கு பெயர் வைத்தது குறித்த சுவாரஸ் நிகழ்வு பற்றி அவரது மகன் அண்ணாதுரை பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “ஒரு மீட்டிங்கில் அப்பா கண்ணதாசன் உட்கார்ந்திருந்தார். அப்போது ஈ.வி.கே.சம்பந்த் தலைவர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார். 

Advertisment
Advertisements

அப்போது என் அப்பா கண்ணதாசனிடம் உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. என்ன பெயர் வைக்க போகிறீர்கள் என்று கேட்கும் பொழுது முஸ்தபா கமால் என்று சொல்லிவிட்டார். அப்படி தான் எனக்கும் அண்ணாதுரை என்று பெயர் வைத்தார். எனக்கு ஒரு மூன்று வயது இருக்கும் பொழுது அண்ணா எங்கள் வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்பொழுது, நான் சாப்பாட்டிற்கு போட்டிருந்த இலை மீது ஓடிக்கொண்டிருந்தேன். 

இதனால் கோபப்பட்ட என் அப்பா டேய் அண்ணா துரை இங்கு வா என்று என்னை அழைத்தார். இதை கேட்ட அண்ணா சிரிக்க ஆரம்பித்துள்ளார். ஏன் சிரிக்கிறீர்கள் என்று என் அப்பா கண்ணதாசன் கேட்ட போது நீ உன் குழந்தைக்கு எதற்கு என் பெயர் வைத்தாய் என்று தெரியும். நான் உட்கார்ந்திருக்கும் போதே டேய் அண்ணாதுரை என்கிறாய் என்று கிண்டலாக பேசினார். அதன் பிறகு என் அப்பா என் முழு பெயரை வைத்து கூப்பிட்டது இல்லை. துரை என்று தான் கூப்பிடுவார். 

அண்ணா உடல் நிலை சரியில்லாம் மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது என் அப்பா பார்க்க சென்றார். அப்போது சைகையில் கேட்டார் உன் மகன் எப்படி இருக்கிறான் என” என்றார்.

Cinema Kannadasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: