/tamil-ie/media/media_files/uploads/2018/07/1-81.jpg)
தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
`அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம்`உள்குத்து'. தற்போது தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது.
ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி செய்துள்ளார்.
Here is the teaser of annanukku jey.. best wishes to the team. God bless. Spread love. https://t.co/xWtSnyWzQD
— Dhanush (@dhanushkraja) 26 July 2018
இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர். இந்நிலையில் தற்போது இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலலரை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.