அன்னபூரணி திரைப்பட விவகாரத்தில் ” எங்களை அறியாமல் சிலரது மனதை புண்படுத்தி இருப்பதாக உணர்கிறோம்” என்று நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி உள்ள அன்னபூரணி திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதை அதிகமானோர் பார்த்தாலும், சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் படி உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலிறுத்தப்பட்டது
இந்நிலையில் படத்தில் உள்ள சர்ச்சை காட்சிகள் நீக்கும் வரையில், படத்தை ஓடிடி தளத்தில் இருந்து நீக்குவதாக, அப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டுடியோ அறிவித்திருந்தது. இந்நிலையில் படம் நீக்கப்பட்டது. தற்போது நடிகை நயன்தாரா இது தொடர்பாக மனிப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஜெய் ஸ்ரீராம் என்று குறிப்பிட்டு விளக்கம் அளித்துள்ளார் “ எனது நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும், சுய விருப்பதுடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
அன்னபூரணி திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமில்லாமல், ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே அன்னபூரணி திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“