திருட்டு இணையதளங்களில் அண்ணாத்த… ஐகோர்ட்டு முக்கிய உத்தரவு!

Annatha movie release banned in online illegally Tamil News சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் இந்த படம் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அதனால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Annatha movie release banned in online illegally Tamil News
Annatha movie release banned in online illegally Tamil News

Annatha movie release banned in online illegally Tamil News : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருந்த ‘அண்ணாத்த’ திரைப்படம் இணையத்தில் வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் எனப் பல முன்னணி நடிகர்கள் நடித்து, தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில், இந்தத் திரைப்படம் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கவேண்டுமெனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அண்ணன், தங்கை பாசப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. நவம்பர் 4-ம் தேதி தீபாவளியான இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் இந்த படம் வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அதனால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்றும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், அண்ணாத்த திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடத் தடை விதித்து இணையதளங்கள் மற்றும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Annatha movie release banned in online illegally tamil news

Next Story
இசைவாணி, பாவனி, அக்ஷரா மீது அட்டாக்… இமான் அண்ணாச்சி ஏன் இப்படி மாறிட்டாரு?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com