பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை தொடர்ந்து, அவரின் மரணம் தற்கொலையல்ல, கொலை என்று அவரின் ரசிகர்கள் பலரும் பல்வேறு யூகங்களை கருத்துகளாக சமூக வலைதளங்களில் முன் வைத்தனர். நடிகை கங்கனா ரனாவத் இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகாராஷ்ட்ரா அரசை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் பல்வேறு ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.
கடந்த வாரம் மும்பை காவல்துறைக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், ”கங்கனா ரனாவத், காவல்துறையை, அரசு நிறுவனங்களை, மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட அனைத்து அரசு செயல்முறைகளையும் குற்றம் சுமத்தும் வகையில் ட்வீட் செய்திருந்தார்” என்று இந்த புகாரை வைத்துள்ளார். மேலும் கங்கனாவின் ட்வீட்கள் இந்திய நீதித்துறையை கேலி செய்யும் வகையில் அமைந்திருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேசதுரோகம், பல்வேறு சமயத்தினரிடையே வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் வருகின்ற நவம்பர் 10ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil