’தளபதி 63’யில் இணைந்த மற்றொரு நடிகை!

இந்தக் குழுவில் தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார்.

thalapathi 63, விஜய் 63
thalapathi 63, விஜய் 63

Thalapathy63 : சர்கார் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், தற்போது அட்லியின் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 63 என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நயன்தாரா, கதிர், யோகிபாபு ஆகியோரும் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள்.

படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படம், வரும் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

Actress Indhuja
Actress Indhuja

கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘தளபதி 63’ படத்தில், ஃபுட்பால் கோச்சாக விஜய் நடிக்கிறார்.

இந்நிலையில், இந்தக் குழுவில் தற்போது மேலும் ஒரு நடிகை இணைந்துள்ளார். மேயாத மான்  திரைப்படத்தில் வைபவின் தங்கையாக நடித்திருந்த, இந்துஜா தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அவருடைய போர்ஷனுக்கான படபிடிப்பில் ஏற்கனவே அவர் கலந்துக் கொண்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Another heroine joins thalapathy 63 and starts her shooting

Next Story
PM Narendra Modi Biopic: மோடியின் பயோபிக் படத்துக்கு தடை!Election Commission Banned PM Narendra Modi Movie
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com