By: WebDesk
Updated: November 23, 2019, 12:27:00 PM
Anu Sithara Latest Images
Anu Sithara’s gorgeous images : ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகையை ஃபேவரிட் நடிகையாக்கிக் கொண்டு, அவரை ட்ரெண்ட் செய்வது தமிழ் ரசிகர்களின் வழக்கம். லட்சுமி மேனன், ஸ்ரீ திவ்யா, மேகா ஆகாஷ் போன்ற நடிகைகள் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவர்கள் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான துவக்க காலத்தில், அவர்களை சமூக வலைதளங்களில் பெருமளவு ட்ரெண்ட் செய்து தங்களைது ஆதரவை வெளிப்படுத்தினர் தமிழ் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போதைய ட்ரெண்ட் நடிகை அனு சித்தாரா. ஆனால் அவர் நடித்த ஒரேயொரு தமிழ் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதிலும் அவர் பெரிதாக கவனிக்கப்படவில்லை. கடந்த 2013-ல் வெளியான, “பட்டாஸ் பாம்”, “ஒரு இந்தியன் ப்ராணக்கதா” போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அனு. அதன் பிறகு ’திமிரு’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘வெறி’ என்ற படத்தை இயக்கினார், இயக்குநர் தருண் கோபி. இது தான் ஹீரோயினாக அனு சித்தாராவுக்கு முதல் படம். 2017-ல் இயக்கப்பட்ட இப்படம் பல சிக்கல்களால் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இயற்கை அழகி அனு! எப்போதும் டக்கராக இருக்கும் சாண்டல் மெரூன் காம்பினேஷன்! இன்னொரு மலையாள தேசத்து அழகி! விருது விழா நிகழ்ச்சியில் அழகிய நடனம்! அழகான ராட்சசி கடல் காற்றில்… கனிவான பார்வை! மெல்லிய புன்னகை! அளவான சிரிப்பு அழகு அனு சித்தாரா இயற்கையுடன்!
இதனைத் தொடந்து மம்மூட்டி, ஜெயராம், ரஹ்மான், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, வினீத் ஸ்ரீனிவாசன், டோவினோ தாமஸ் உள்ளிட்ட மலையாள முன்னணி நடிகர்களுடன் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார். அனுவின் நடிப்பில் ‘பொது நலன் கருதி’ என்ற தமிழ்ப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது. ஆனாலும் அவர் கவனிக்கப்படவில்லை. இதற்கிடையே தமிழ் இளைஞர்களின் விருப்ப நடிகையாக தற்போது வலம் வருகிறார் அனு சித்தாரா. அளவான மேக்கப், நேர்த்தியான உடை, ஹோம்லியான தோற்றம் என அவர் இயல்பாக இருப்பது தான் இந்த ரசிகர் பட்டாளத்துக்குக் காரணமாம். தவிர, 22 வயதாகும் அனு சித்தாரா, 18 வயதிலேயே தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது!