/indian-express-tamil/media/media_files/2025/08/20/screenshot-2025-08-20-133654-2025-08-20-13-37-12.jpg)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பரதா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற ஒரு சிறப்பு நேர்காணலில், அனுபமா தனது எதிர்பார்ப்புகள் மற்றும் பட அனுபவங்களை பகிர்ந்ததோடு, இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கவுள்ள ‘பைசன்’ திரைப்படம் குறித்தும் அவரது கருத்துக்களை கூறினார்.
அந்த பேட்டியில், சமூக சரிவுகளையும் உணர்வுப் பெருக்கத்தையும் கதையின் ஊடாக நேர்த்தியாகக் கொண்டுவரும் மாரிசெல்வராஜ் குறித்து அவர் பாராட்டினார். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்கள் மூலம் அந்த இயக்குநர் தமிழ் சினிமாவில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளதாகவும், தற்போது அவர் இயக்கியுள்ள பைசன் பற்றியும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் எனவும் அனுபமா தெரிவித்தார்.
இந்நிலையில், தனது புதிய படம் ‘பரதா’ மக்களுக்கு ஒரு வேறுபட்ட அனுபவத்தை வழங்கும் என்று நம்புவதாகவும், அதற்கு வரும் எதிர்விளைவு மற்றும் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேர்காணலில் அனுபமா பரமேஸ்வரன் 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தின் கதையை முதலில் தன்னிடம் தான் மாரிசெல்வராஜ் கூறியதாகக் தெரிவித்தார்.
ஆனால், அந்த காலகட்டத்தில் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால், தேதிகள் இல்லாமல் அந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்றும், அந்த வாய்ப்பை இழந்ததற்காக மிகவும் வருந்தியதாகவும் தெரிவித்தார்.
அதற்குப் பிறகு, 'மாமன்னன்' திரைப்படத்திற்காகவும் மாரிசெல்வராஜ் தன்னுடன் தொடர்பு கொண்டார். ஆனால், அப்போதும் சில காரணங்களால் அந்தப்படத்திலும் நடிக்க முடியவில்லை என அனுபமா தெரிவித்தார்.
இதன் பிறகு, மூன்றாவது முறையாக பைசன் திரைப்படத்திற்காக அவர் அழைத்தபோது, அதை ஆர்வத்துடன் ஏற்று உடனே ஒப்புக்கொண்டதாக கூறினார்.
மேலும், 'பைசன்' படத்திற்காக இயக்குநர் மாரிசெல்வராஜ் ஒரு புதிய கோணத்தையும், முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட ஒரு புதுமையான அணுகுமுறையையும் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
மாரி செல்வராஜின் அணுகுமுறை மற்ற இயக்குனர்களிடம் இருந்து மாறுபட்டுள்ளதாகவும், தொடர்ந்து இந்த 'பைசன்' படம் தனது திரை வாழ்க்கையில் முக்கிய இடத்தில் இருக்கும் எனவும் அனுபமா பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில் ஜோ கதாப்பாத்திரத்தில் கயல் ஆனந்தி நடித்திருந்தது அனைவராலும் பாராட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.