”குழந்தை பிறந்த பிறகு” - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா!

தற்போது முழுமையான பாதுகாப்புடன் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா சர்மா

தற்போது முழுமையான பாதுகாப்புடன் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா சர்மா

author-image
WebDesk
New Update
”குழந்தை பிறந்த பிறகு” - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அனுஷ்கா சர்மா!

Anushka Sharma I will be back shooting again once I deliver my first child: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து கரம் பிடித்தார். அவர்கள் தற்போது தங்கள் முதல் குழந்தையின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisment

பிரசவகாலம் நெருங்குவதால் அவருடன் இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் டூரை ரத்து செய்துள்ளார் விராட் கோலி. இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா குழந்தை பிறந்த சிறிது காலத்திற்குள் மீண்டும் தான் நடிக்க வருவேன் என்று கூறியுள்ளார். கொரோனா காலத்திலும் பாதுகாப்பான முறையில் நான் ஷூட்டிங்கிற்கு சென்றேன்.

குழந்தை பிறந்த பிறகும் நான் நடிக்க செல்வேன் என்று கூறியுள்ளார். முழுமையாக தயார் நிலைக்கு திரும்பிய பிறகு அடுத்த ஆண்டு மே மாதம் முதல் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். அவர் இறுதியாக 2018ம் ஆண்டு ஜீரோ படத்தில் ஷாருக் கான் மற்றும் காத்ரினா கைஃபுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழுமையான பாதுகாப்புடன் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா சர்மா

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Anushka Sharma

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: