அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தங்களது இரண்டாவது திருமண ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்றனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி 20 தொடரில் பிஸியாக இருந்தபோதிலும், அனுஷ்கா மீதான தனது அன்பை வெளிப்படுத்த மறக்கவில்லை கோலி. அனுஷ்காவும் தனது கணவர் மீதான அன்பை இன்ஸ்டாகிராமில் கொட்டியிருக்கிறார்.
இத்தாலியில் நடந்த தங்கள் திருமணத்திலிருந்து ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, “இன்னொருவரை நேசிப்பது கடவுளின் முகத்தைப் பார்ப்பது” - விக்டர் ஹ்யூகோ. அன்பு ஒரு உணர்வு மட்டுமல்ல, அதைவிட மிக அதிகம். அது ஒரு வழிகாட்டி, ஒரு உந்துசக்தி, முழுமையான உண்மைக்கான பாதை. அதைக் கண்டறிவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன், உண்மையிலேயே, முற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டவள் நான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விரைவில், இந்திய கேப்டன் தனது இரண்டாவது திருமண நாளை முன்னிட்டு மனைவி அனுஷ்காவுக்கு தனது அன்பையும் வாழ்த்தையும் பகிர்ந்தார். திருமணத்தின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “நிஜ வாழ்க்கையில் அன்பு மட்டும் தான் இருக்கும். வேறு ஒன்றும் இல்லை. அதை அன்றாடம் உணர்த்தும் நபருடன் இருக்கும் போது, கடவுள் உங்களை அசிர்வதிக்கும் உணர்வு ஏற்படும். நன்றி” என்று தெரிவித்திருந்தார்.
அனுஷ்கா மற்றும் விராட் டிசம்பர் 11, 2017 அன்று திருமண இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர். அப்போது அவர்களது திருமணம் முக்கிய பேச்சாக மாறியது. இரு நட்சத்திரங்களின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே அத்திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.