’ஜனவரி 2021-ல் நாங்கள் மூன்று பேர்’ அனுஷ்கா-விராட் சொன்ன குட் நியூஸ்!

அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் காதலித்து டிசம்பர் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர்.

By: Updated: August 27, 2020, 12:52:46 PM

பாலிவுட் நடிககை அனுஷ்கா சர்மா, தானும், தனது கணவர் விராட் கோலியும் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்ப்பதை சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தினார்.

“பிறகு, நாங்கள் மூன்று பேர்! ஜனவரி 2021 வருகை” என ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார் அனுஷ்கா. நடிகையின் ட்வீட்டின் படி, குழந்தை 2021 ஜனவரியில் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியும் இதே ட்வீட்டை பகிர்ந்துள்ளார்.

அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் காதலித்து டிசம்பர் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர். இதில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என நெருங்கிய உறவினர்கள் கலந்துக் கொண்டனர். பின்னர் இத்தம்பதியினர் டெல்லி மற்றும் மும்பையில் இரண்டு ஆடம்பரமான திருமண வரவேற்புகளை நடத்தினர். தொழில்முறையைப் பொறுத்தவரை அனுஷ்கா கடைசியாக ஷாரூக் கான் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோருடன் இணைந்து 2018-ஆம் ஆண்டு ஜீரோ படத்தில் நடித்தார். அவர் சமீபத்தில் பாட்டல் லோக் மற்றும் புல்பூல் போன்ற வலை தொடரை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Anushka sharma virat kohli expecting their first baby by january 2021

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X