/tamil-ie/media/media_files/uploads/2019/11/Anushka-Sharma-Virat-Kohli.jpg)
Anushka Sharma Virat Kohli
Virat Kohli - Anushka Sharma: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரரும், தனது கணவருமான விராட் கோலியின் உடைகளை திருடி அணிவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். வோக் இதழிடம் பேசிய அனுஷ்கா, தான் அப்படிச் செய்வதை விராத்தும் விரும்புகிறார் என்றார்.
”நான் உண்மையில் அவரது அலமாரியில் இருந்து பலவற்றை பயன்படுத்துகிறேன். பெரும்பாலும் டி-சர்ட் போன்ற துணி வகைகளை திருடுகிறேன். சில நேரங்களில் நான் அவருடைய ஜாக்கெட்டுகளை எடுத்துக்கொள்வேன். நான் அவரது உடைகளை அணியும்போது விராத் மகிழ்ந்து போகிறார்” என்றார்.
அந்த நேர்க்காணலில், திருமண நாளில் பிங்க் நிற உடை அணியக்கூடாது என்பதை தான் நம்பவில்லை என்றும், அவ்வாறான விஷயங்களை தான் நம்புவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் அனுஷ்கா. அனுஷ்காவும் விராத் கோலியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமான சில மணி நேரங்களில் அவர்களது படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பிங்க் கலர் ’சபியாசாச்சி லெஹங்காவில்’ மணப்பெண்ணாக ஜொலித்தார் அனுஷ்கா.
அனுஷ்காவும், விராத்தும் தற்போது பூட்டானில் விடுமுறையைக் கழிக்கின்றனர். அதோடு ஒவ்வொரு நாளும் அந்தப் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். விராத்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்கள், வெகேஷனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.