/tamil-ie/media/media_files/uploads/2019/02/Anushka-Shetty-latest-weight-loss.jpg)
Anushka Shetty latest weight loss
Anushka Shetty : நடிகை அனுஷ்கா ஷெட்டி கடைசியாக இயக்குநர், ஜி அசோக் இயக்கியிருந்த பாகமதி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது அவர் மாதவனுடன் இணைந்து நடித்திருக்கும் சைலன்ஸ் / நிசப்தம் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. ஆரம்பத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரையில் முதல் கொரோனா பாதிப்பு: வெளிநாடு தொடர்பே இல்லாதவருக்கு வந்தது எப்படி?
சமீபத்தில் அனுஷ்கா மற்றும் இயக்குனர் ஹேமந்த் மதுகர், நடிகர் சுப்பராஜு உள்ளிட்ட நிசப்தம் படக் குழுவினர் தெலுங்கு தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் புரோமோஷனுக்காக கலந்துக் கொண்டனர். அப்போது அனுஷ்கா உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
அனுஷ்காவின் திரைப்பட பயணம் குறித்த வீடியோ அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது தான் அனுஷ்காவின் உணர்வுப் பூர்வமான தருணம் நிகழ்ந்தது. அந்த வீடியோவைப் பார்த்த அவர், கடந்த ஆண்டு காலமான இயக்குனர் கோடி ராமகிருஷ்ணாவை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாகக் கூறினார். அதோடு அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்கலாம் என்றும் கூறினார். கோடி ராமகிருஷ்ணா அனுஷ்காவுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை அளித்த பிளாக்பஸ்டர் படமான ‘அருந்ததி’ படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் முதல் கொரோனா பாதிப்பு: வெளிநாடு தொடர்பே இல்லாதவருக்கு வந்தது எப்படி?
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.