Advertisment

ரஜினிகாந்த் ஹெல்த் ரிப்போர்ட்: ரத்த நாளத்தில் வீக்கம்; சரி செய்யப்பட்டதாக அப்பல்லோ அறிக்கை

ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது, 2 நாட்களில் வீடு திரும்புவார் – அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajinikanth ANI

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Advertisment

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்

இந்தநிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றிரவு சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு அவரது அடிவயிறுப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. அதேபோல பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ”ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் வீடு திரும்புவார். ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். வெறும் வயிற்றில் வரவேண்டும் என்பதால் நேற்று இரவே மருத்துவமனைக்கு வர வைத்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்தனர்,” என்று கூறினார்.

இதற்கிடையே ரஜினிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்தநிலையில் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் 30 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தை விட்டு வெளியேறும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் ஏற்பட்டது, இது அறுவை சிகிச்சை அல்லாத, டிரான்ஸ்காதெட்டர் முறை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. மூத்த இருதயவியல் மருத்துவர் சாய் சதீஷ் ரஜினிகாந்தின் ரத்தக் குழாயில் ஸ்டண்ட் வைத்து வீக்கத்தை முழுவதுமாக சரி செய்தார். ரஜினிகாந்துக்கான சிகிச்சை திட்டமிட்டப்படி நடந்துள்ளது என்பதை ரஜினிகாந்த் நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களிடம் தெரிவித்துக் கொள்கிறோம். ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது, 2 நாட்களில் வீடு திரும்புவார். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Rajinikanth Apollo Hospital
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment