Advertisment
Presenting Partner
Desktop GIF

ஆப்பிள் - ஓபன் ஏ.ஐ. இணைப்பு : தமிழ் பட போஸ்டரை வைத்து விமர்சித்த எலான் மஸ்க் : வைரல் போஸ்ட்!

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன், ஐபேட், மேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Elon Musk

எலான் மஸ்க்

உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்க்,  ஆப்பிள் ஓபன் ஏ.ஐ.விவகாரத்தில், தமிழ் படமான தப்பாட்டம் போஸ்டரை பகிர்ந்து கடுமையாக விமர்சித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

உலக பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா கார் நிறுவனத்தை வைத்துள்ள இவர், தற்போது தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். குறிப்பாக இணையதள சேவை வழங்கக்கூடிய செயற்கை கோள்களை செலுத்துவது, மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகள் குறித்து ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்கள் குறித்த ஆராய்ச்சியில் எலான் மஸ்க் பலமுறை தொல்வியை சந்தித்திருந்தாலும், தற்போது இதரில் பெரிய வெற்றயை பெற்றுள்ளார். ஸ்டார்லிங்க் நெட்வொர்க் மூலம் நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியுள்ள எலான் மஸ்க், தனது டெஸ்லா நிறுவனத்தின் மூலம், எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். தனது முயற்சிகளில் பல வெற்றிகளை கண்ட எலான் மஸ்க் அவ்வப்போது மற்ற நிறுவனங்களை விமர்சித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதற்கு முன்பு ட்விட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுந்தபோது, கடுமையாக விமர்சனங்களை முன் வைத்த எலான் மஸ்க் பின்னர் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கி, அதற்கு எக்ஸ் என்று பெயரை மாற்றினார். தற்போது சுதந்திரமாக தினமும் பல பதிவுகளை தனது எக்ஸ் பக்கததில் பதிவிட்டு வருகிறாா. அந்த வகையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஓபன் ஏ.ஐ விவகாரம் குறித்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் நிறுவனம், ஐபோன், ஐபேட், மேக் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த சாதனங்கள் அனைத்திலுமே ஐஓஎஸ் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முன்னணி நிறுவனமான கூகுள் அப்ளிகேஷனை கூட பயன்படுத்த முடியாத வகையில் லாக் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது ஆப்பிள் நிறுவனத்துடன் முன்னணி நிறுவனமான ஓபன் ஏ.ஐ. நிறுவனம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் ஆப்பிள் ஐபோன், மேக், ஐபேட் ஆகியவற்றில் ஓபன் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று ஆப்பிள் நிறுவன சி.இ.ஓ டிம் குக் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரீ-ட்விட் செய்திருந்த எலான் மஸ்க், ஆப்பிள் போன்களில் ஓபன் ஏ.ஐ டூல்களை பயன்படுத்தும் வசதி இருந்தால், அந்த சாதனங்களை தனது நிறுவனத்தில் பயன்படுத்த தடை விதிபபதாக கூறியிருந்தார்.

தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவே பலர் ஆப்பிள் போன்களை பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது ஒபன் ஏ.ஐ நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் இணைந்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் தரவுகளை பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால், ஆப்பிள் பயனாளர்களின் தனி மனித உரிமை பாதிக்கப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ள நிலையில், ஆப்பிள் – ஓபன் ஏ.ஐ இணைவது குறித்து வாடிக்கையாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

இது குறித்து தமிழ் படமான தப்பாட்டம் படத்தின் போஸ்டரை பகிர்ந்த எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த போஸ்டரில், நாயகி ஒரு இளநீரை குடிக்க, அவரது வாயில் இருந்து ஒரு ஸ்ரா நாயகனின் வாயில் இருக்கும். இந்த போஸ்டரை வெளியிட்ட எலான் மஸ்க் இந்த இணைப்பு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், யாரோ ஒரு தமிழன் தான், அவருக்கு இந்த மீமை பகிர்ந்திருப்பார் என்று கூறி வருகின்றனர். டெஸ்லா நிறுவனத்தின் டெக்கியாக இருக்கும் அசோக் எல்லுச்சாமி தான் இந்த ஐடியாவை கொடுத்திருப்பார் என்றும் கூறி வருகின்றனர்.

இதனிடையே இந்த தப்பாட்டம் படத்தில் நடித்த நடிகர் துரை சுதாகர் இது இது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். களவானி 2 படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான துரை சுதாகர் அடுத்து ஒரு சில சிறு பட்ஜெட் படங்களில் நடித்திருந்தார், அதில் ஒரு படம் தான் இந்த தப்பாட்டம். இந்த படம் தற்போது உலகளவில் பிரபலமாக பேசப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த எலான் மஸ்க் அவர்களுக்கு மிக்க நன்றி. தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் பார்க்கிறேன்.

எலான் மஸ்க் வரை இந்த படத்தை கொண்டு சேர்த்த சமூகவலைதளங்களில் அனைவருக்கும் என் நன்றி என்று கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

ElonMusk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment