/indian-express-tamil/media/media_files/2025/09/09/download-8-2025-09-09-11-43-38.jpg)
தமிழ் சினிமா உலகத்தில் சமூக பிரச்சனைகள் மற்றும் அரசியல் சிந்தனைகளை திரைபடத்தின் வாயிலாக மக்களுக்கு கொண்டுசெல்லும் இயக்குநர்களில் முக்கியமானவராக பெயர் பெற்றவர் ஏ.ஆர். முருகதாஸ். அவரது திரைப்பயணம் தொடக்கம் முதலே, வெறும் பொழுதுபோக்கு மட்டும் அல்லாமல், மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பற்றிய, அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை எடுத்துரைக்கும் கதைகள் மையமாகவே அமைந்துள்ளன.
அவர் இயக்கிய ‘ரமணா’, ‘கத்தி’, ‘சர்கார்’ போன்ற திரைப்படங்கள் அனைத்தும் சமூக நீதியையும், அரசியல் நிலைகளையும் பேசும் படைப்புகளாக இருந்தன. ஒவ்வொன்றும் ஒரு கட்டமைக்கப்பட்ட கருத்தை முன்வைத்து, பளிச்சென்று உணர்த்தியவை.
இந்த வகையில், இயக்குநர் ஷங்கர் போலவே, ஏ.ஆர். முருகதாஸும் ஒரு சமூக உணர்வுள்ள இயக்குநராக தமிழ்சினிமாவில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். ஷங்கர் தனது படங்களில் தொழில்நுட்ப அசுரப்பணிகளை கொண்டு மக்கள் சிந்திக்கவைக்கும் வகையில் கருத்துகளை சொல்லுகிறாரெனில், முருகதாஸ் மிக எளிமையாக, நம் சூழலோடு இணைந்த, நம்மை நேரடியாகத் தாக்கும் வகையில் கதையை உருவாக்குகிறவர்.
இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ சமீபத்திய ஒரு பேட்டியில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு குறித்தும், அதனால் ஏற்பட்ட மனநிறைவு மற்றும் எதிர்பார்ப்பு குறித்தும் உரையாடியுள்ளார்.
அதை பற்றி அவர் பேசுகையில், "முனாபாய் எம்பிபிஎஸ் என்கிற திரைப்படத்தை தான் தமிழில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்று எடுத்தனர். அந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு முதலில் எனக்கு தான் வந்தது படத்தின் கதையை கேட்ட பிறகு நான் இரண்டு விஷயங்களை முடிவு செய்தேன். ஒன்று இந்த படத்தில் கமல் மெட்ராஸ் தமிழில் பேசக்கூடாது ரவுடி என்றாலே மெட்ராஸ் தமிழில் பேசுவது என்பதுதான் வழக்கமாக இருக்கும் ஆனால் அதை கமல் எக்கச்சக்கமான தடவை செய்துவிட்டார்.
எனவே அதை இந்த படத்தில் வைக்கக்கூடாது மேலும் கிரேசி மோகன் இந்த படத்திற்கு வசனங்கள் எழுத கூடாது. ஏனெனில் படத்தில் உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைய இருக்கின்றன. கிரேசி மோகன் எழுதும் காமெடி காட்சிகளால் அந்த உணர்வுபூர்வமான காட்சிகள் அடிபட்டு போக வாய்ப்புகள் இருக்கிறது என்று நினைத்தேன். அடுத்த ஒரு வாரத்தில் அந்த படம் கை மாறி போய்விட்டது ஆனால் நான் எந்த இரண்டு விஷயங்கள் அந்த படத்தில் இருக்கக் கூடாது என்று நினைத்தானோ அவை இரண்டுமே அந்த படத்தில் இருந்தது." என்று கூறியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.