Advertisment

ரூ.2 கோடி எலக்ட்ரிக் கார்.. மகள்கள் ஒய்யார போஸ்.. ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்த ரகசியம்!

ஏ.ஆர். ரஹ்மான் மகள்கள் வாங்கியிருப்பது போர்ஷே ரக கார் ஆகும்.

author-image
WebDesk
New Update
AR Raghumans daughters electronic car

எலக்ட்ரானிக் காருடன் ஏ.ஆர். ரஹ்மான் மகள்கள்

இசை புயல் ஏஆர் ரஹ்மானுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். அவரது மகள்கள் கதீஜா மற்றும் ரஹிமா. இருவரும் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இருவரும் காரின் முன்னால் நின்று ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

Advertisment

இந்தப் படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் மகள்கள் வாங்கியிருப்பது போர்ஷே ரக கார் ஆகும்.

இந்தக் கார்கள் தற்போதுதான் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளன. இந்தக் காரின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் அதிகமாகும். போர்ஷே கார் நிறுவனம் முதன் முதலில் 2019இல் எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது.

ஏ.ஆர். ரஹ்மான் தற்போது லால் சலாம் படத்திற்கான இசை கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இவரின் மகள் கதீஜா, ரகுமானின் இசை அறக்கட்டளை பணிகளை கவனித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment