மக்கள் என்னை புறக்கணிக்காத வரை, நான் மகிழ்ச்சியாக இருப்பேன்; ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஓபன் டாக்!

எனது பாடல்களில் ஏதேனும் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்படும்போது எப்போதும் உற்சாகமாக இருப்பேன். நான் மக்களில் ஒருவன். முதலில் நான் கேட்பவன். என்னை எது உற்சாகப்படுத்துகிறது, மக்களை எது உற்சாகப்படுத்தும் என்பதை நான் எப்போதும் பார்ப்பேன்.

எனது பாடல்களில் ஏதேனும் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்படும்போது எப்போதும் உற்சாகமாக இருப்பேன். நான் மக்களில் ஒருவன். முதலில் நான் கேட்பவன். என்னை எது உற்சாகப்படுத்துகிறது, மக்களை எது உற்சாகப்படுத்தும் என்பதை நான் எப்போதும் பார்ப்பேன்.

author-image
WebDesk
New Update
Rahman AR

ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகளாவிய இசையை ஆராய்வதில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இசை, சமூகத்தை வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டது என்றும், இன்று மக்கள் “நல்ல இசைக்கும் கவிதைக்கும் ஏங்குகிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

Advertisment

இநதிய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ,ஆர்.ரஹ்மான், பி.டி.ஐ நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “உலகம், முன்பைப்போல் கலாச்சார ரீதியாக பாதுகாக்கப்பட்டதல்ல, இப்போது மிகவும் திறந்த நிலையில் உள்ளது. உதாரணமாக, நாம் துருக்கிய வாத்தியங்களில் இந்திய இசைக் குறிப்புகளை இசைக்கலாம், மேலும் மக்கள் வெவ்வேறு ஒலிகளை ரசிக்கிறார்கள்,” என்று கூறியுள்ளார்.

அதேபோல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி ஒரு துருக்கிய வயலின் இசைக்கலைஞர், புனேவைச் சேர்ந்த ஒரு டோல் இசைக்கலைஞர் மற்றும் லக்னோவைச் சேர்ந்த ஒரு கர்நாடக இசைப் பாடகருடன் இணைந்தார். “நான் எல்லா வகையான இசையையும் கேட்பேன். சிலசமயம் வானொலியில், ஐடியூன்ஸ், ஸ்பாட்டிஃபை அல்லது ரீல்ஸ்களில் கேட்டு ஒரு கலைஞரைக் கண்டறிவேன். நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்புவேன், அவர்களும் பதிலளிப்பார்கள். உலகம் சுருங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது பாடல்களில் ஏதேனும் ஒன்று ரீமிக்ஸ் செய்யப்படும்போது எப்போதும் உற்சாகமாக இருப்பேன். நான் மக்களில் ஒருவன். முதலில் நான் கேட்பவன். என்னை எது உற்சாகப்படுத்துகிறது, மக்களை எது உற்சாகப்படுத்தும் என்பதை நான் எப்போதும் பார்ப்பேன். மக்கள் என்னைப் புறக்கணிக்காதவரை, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தத் துறையில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தரமான இசைக்கான ஒரு ஏக்கம் இருப்பதாகவும், திரைப்பட இசை பாராட்டப்படுவதைக் கண்டு தான் மகிழ்ச்சியில் திளைப்பதாகவும் கூறியுள்ளார். 

Advertisment
Advertisements

மேலும், இசை எப்போதும் ஒரு நல்ல விஷயம், அது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மோசமான இசை வரும்போது, மக்கள் மோசமாகிவிடுகிறார்கள். நல்ல பாடல்களும் நல்ல ராகங்களும் சமூகத்தை ஊக்கப்படுத்துகின்றன. நாம் குழப்பத்தில் வாழ்கிறோம், அந்தக் குழப்பம் இசையால் அதிகரிக்கப்படக் கூடாது; அதற்கு நேர்மாறாக, அது நடக்கும் விஷயங்களுக்கான ஒரு மாற்று மருந்தாக இருக்க வேண்டும். நல்ல இசைக்கும் கவிதைக்கும் மக்கள் ஏங்குகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் தற்போது, அவர் இசையமைத்துள்ள வரவிருக்கும் இந்தித் திரைப்படமான ‘உஃப் யே சியப்பா’ ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார். இது ஒரு வசனமில்லாத படமாக உருவாகியுள்ளது, இதில் சோஹும் ஷா, நுஷ்ரத் பருச்சா மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை, ‘துர்காமதி’ புகழ் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் ஜி. அசோக் எழுதி இயக்கியுள்ளார்.

இது குறித்து பேசிய ரஹ்மான், ஒரு வசனமில்லாத படத்திற்கு இசையமைப்பது சவாலாக இருந்தது என்றும், தனது இசை எவ்வாறு கதையை நகர்த்துகிறது என்பதைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் பல வசனங்கள் இருப்பதால், இசை அதில் மூழ்கிவிடுகிறது. இசை கதையை நகர்த்தும் ஒரு வசனமில்லாத படத்தைச் செய்வது ஒரு சவால். திரைக்கதை நகைச்சுவையாக இருந்தது, இந்த படத்திற்கு இசையமைப்பது உற்சாகமாக இருந்தது என்றும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

லவ் ரஞ்சன் மற்றும் அன்குர் கார்க் தயாரித்துள்ள ‘உஃப் யே சியப்பா’, செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்திய, ஆர்கெஸ்ட்ரா மற்றும் ஜாஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான இசை இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

Tamil Cinema Update Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: