AR Rahman, GV Prakash Awareness Video on International Day Against Drug Abuse and Illicit Trafficking 2020
AR Rahman Awareness Video on International Day Against Drug Abuse and Illicit Trafficking 2020 : போதை மருந்து பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போதை பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை பிரபலங்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “போதைப் பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நாள் இன்று. இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் விழிப்புணர்வு அவசியம். இந்த கொரோனா போன்ற நோய் தொற்றில் இருந்து விரைவில் மீண்டு விடலாம். ஆனால் போதை பொருட்களுக்கு அடிமையாகிவிட்டால் மீள்வது சிரமம். போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானது. தீய எண்ணங்களையும், கேட்ட நடத்தைகளையும் உருவாக்கும். பலர் வாழ்க்கை அழியும்.
Advertisment
Advertisements
கொடூர குற்றங்கள், வன்கொடுமை, சிறுவர்களின் வாழ்கை சீரழிவு போன்ற பல்வேறு சீரழிவுகள் போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள். எனவே போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்போம், தடுப்போம். இளைய தலைமுறையை காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் விழிப்புணர்வு வீடியோ
ஏ.ஆர். ரஹ்மான் போன்றே, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷூம் போதை பொருட்களுக்கு எதிரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil