/tamil-ie/media/media_files/uploads/2018/09/AR-Rahman-Reply-to-Simtaangaran-Song-Criticizers.jpg)
AR Rahman Reply to Simtaangaran Song Criticizers
AR Rahman Composed Song Simtaangaran Review: சிம்டாங்காரன் பாடலை விமர்சிப்பவர்களுக்கு ஏஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார். சர்க்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக் "சிம்டாங்காரன்" சமீபத்தில் வெளியானது.
விஜய்க்கு மாஸ் ஹிட் அடித்த ஆளப்போறான் தமிழன் கூட்டணி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. கண் சிமிட்டாமல் யாரைப் பார்க்கத் தோன்றுகிறதோ அவனே சிம்டாங்காரன் என பாடலாசிரியர் விவேக் விளக்கமளித்தார்.
பாடல் வெளியானதும், ஆர்வத்தோடு கேட்ட ரசிகர்கள், முழுக்க முழுக்க சென்னைத் தமிழில் இருந்ததால் அர்த்தம் புரியாமல் குழம்பினர். இது கானா பாடலா,குத்து பாடலா, வெஸ்டெர்னா என எந்த வடிவத்திலும் சிக்காத ஒரு பாடலாக அது இருந்தது. புதிய முயற்சியை ஏஆர்.ரஹ்மான் எடுத்துள்ளார் என பலர் கொண்டாடினாலும், ரஹ்மானின் இசை இது இல்லை.
AR Rahman Composed Song Simtaangaran Review: சிம்டாங்காரன் பாடலை கேலி செய்தவர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் பதிலடி:
அவர் லோக்கலாக இறங்கிவிட்டர் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஏஆர்.ரஹ்மான், " விமர்சனங்கள் என் இசை வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் என் அனுபவத்தின் மூலம் மக்களின் கருத்துக்களை கணித்துவிடுவேன். சில சமயங்களில் அவர்களுடைய விமர்சனங்களும் பாராட்டுக்களும் என்னை ஆச்சர்யப்படுத்தும்.
ஒரு படத்தின் இயக்குனர், கதாநாயகன், நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கேட்ட பிறகே ஒரு பாடல் வெளிவருகிறது. அது ரசிகர்களிடமிருந்து என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என அறிந்துகொள்ள உதவுகிறது", எனத் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.